வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இலங்கை இறுதி யுத்தம் திரைமறைவு செயல்கள்.. பகுதி-1




இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்தபோரில் ...

மக்களை சுட்டுக்கொன்றது புலிகளின்

 
அமைப்பில் இருந்து பிரிந்து சென்று அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட   தமிழ் ஆயுத

குழுக்கள்தான் என்பது

  இலங்கையின் அதிபர் மகிந்தராஜபக்சே  அமெரிக்க துணைத்தூதருக்கு கூறியதாக

 தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த தகவலில்.....   இறுதி போரில்....

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தமிழ் ஆயுதக்குழுக்களை  பயன்படுத்தியதை இலங்கை அதிபர்
ஒப்புக்கொண்டுள்ளார்.

                         தெரியவருவது...
                         --------------
* புலிகளின்  உறுதி வாய்ந்த முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு அரண்களை <உடைக்க புலிகள்போல்
சீருடை அணிந்த  தமிழ்துரோக குழுக்கள் அந்தப்பகுதியில் களம் இறக்கப்பட்டனர்.

* இவர்களுக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு தந்தது.
களம் இறக்கப்பட்ட  அந்த குழுக்கள்... மக்களிடம் ,புலிகளின்
பாதுகாப்பு அரண்களை நோக்கி செல்லுமாறு கூறினர்.

* அதனை நம்பிய மக்கள் புலிகளின் பாதுகாப்பு
அரண்களைநோக்கி நகர்ந்தபோது புலிகளைப்போல் சீருடை அணிவித்து வரவழைக்கப்பட்ட
குழுக்கள் மக்களை சுட்டனர்.

* வழிநெடுக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள், மற்றும் அரசபடைகளின் கடற்படை, தரைப்படை,
விமானப்படை உள்ளிட்ட ராணுவத்தின் அனைத்து பிரிவுகளின் தாக்குதலுக்கு  மத்தியில் மக்கள்
அலை அலையாக புலிகளின் பாதுகாப்பு வளையத்துக்குள் சென்றனர்.

**   மக்களை முன்னே விட்டு பின்னால் அவர்களை அழித்தபடி சென்றுகொண்டிருந்த துரோககுழுக்களும்,
இலங்கை ராணுவமும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை அழிக்கப்போட்டிருந்த திட்டத்தை
 புரிந்துகொண்டிருந்த புலிகள்தாங்கள் ராணுவத்தின் மீது தாக்குதலை துவக்கினால், மக்கள்
அழிவார்கள் என்பதை, புரிந்துகொண்டு தங்களது ஆயுதங்களை மௌனிக்க செய்தனர்.

*  இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட  ராணுவம் புலிகளை ஒழிப்பதாக கூறி
மக்களை அழித்தொழித்தது.

    இறுதியுத்ததில் கையாளப்பட்ட சில தந்திரங்கள்:
   ---------------------------------------------

 1.புலிகளுக்கு எதிரான குழுக்களுக்கு புலிகள்போல் சீருடை அணிந்து மக்கள்மீது தாக்குதல் நடத்த செய்து
புலிகள் மீது மக்கள் கொண்டிருந்த  நம்பிக்கையை <உடைக்க முயற்சி நடந்துள்ளது.

2.குழம்பிய மனநிலையில்  தவித்த மக்களை புலிகளின் பாதுகாப்பு அரண்களை நோக்கி செல்ல
செய்ததின்மூலம் அந்த அரண்களை செயல் இழக்க செய்துள்ளனர். மேலும் புலிகளின் ஆயுதங்களை
மௌனிக்க செய்துள்ளனர்.

3. புலிகளின் நிலையை நோக்கி சென்ற  மக்கள் மீது புலிகள் போர்வையில் தாக்குதல் நடத்தி மக்கள் மீது
புலிகள்தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழ்மக்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள்  தர இருந்த ஆதரவை
தடுத்துள்ளனர்.

4. மக்கள் இருந்தால்தானே  அவர்கள் புலிகளுக்கு ஆதரவு தருவர்..புலிகள் மீண்டும் எழுவர்..  என்ற
எண்ணத்தில் மக்களை அழித்தொழித்துள்ளனர்.

 5.நெறியற்ற போரை நடத்தி, மக்கள்மீது சொல்லில் வடிக்க முடியாத கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டு,
உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி, ஆதிக்க வெறிக்கு எதிராக எழும் இயக்கங்களுக்கு  மக்கள் ஆதரவு
 தருவதை தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

6. தங்களிடமிருந்த தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இந்த இன அழிப்புபோருக்கு  இலங்கை அரசுக்கு
கொடுத்ததன் மூலம் பல நாடுகள் தடை செய்யப்பட்ட ஆயுத சேமிப்பை கணிசமாக பரிசோதித்துபார்த்துள்ளன.
தவிர அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பார்த்துள்ளன.

7. இந்த யுத்தம் நடைபெறுவதன் மூலம்  பின்னால் நடைபெற உள்ள
 மில்லியன் கணக்கான தொகை தேவைப்படும் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறமுடியும்
என்பதை கணக்கிட்ட பலநாடுகள் இலங்கை அரசின் இன படுகொலைக்கு உதவியுள்ளன.

8. இந்திய விரோத போக்கை கொண்டுள்ள இந்தியாவின் எதிரிநாடுகள்... இலங்கை அரசுக்கு <உதவுவதன்
மூலம் தங்களுக்கான தளங்களை இலங்கையில் அமைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தில்
இலங்கைக்கு உதவி.. அதில் வெற்றியும் பெற்றுள்ளன.

9. இலங்கைக்கு உதவாமல் போனால் தனது எதிரிநாடுகளின் வளைக்குள் இலங்கை சிக்கும் என்ற
நோக்கத்திலும் வேறு சில அரசியல் கணக்குகளையும் போட்டு இந்தியா இலங்கைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும்
தந்தது. இந்தியாவின் கணக்கு தப்பு என்பதை இலங்கை தனது தற்போதைய நடவடிக்கை மூலம்
தெளிவுபடுத்திவருகிறது.

10. இறுதிப்போரின்போது இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பெரிய அளவில்
எதிர்ப்பு வரக்கூடாது என்ற நோக்கில் இந்தியாவுக்கான  இலங்கையின் அப்போதைய தூதர் ஹம்சா மூலம்
கணிசமான அன்பளிப்பு தமிழகத்தின்  குறிப்பிட்ட சில மீடியாக்களுக்கு வழங்கப்பட்டது.

11. தனக்கு எதிரானபோக்கில் உள்ள ஹாங்காங்கிற்கு ஆதரவளித்த நார்வே இலங்கையின் அமைதிப்பேச்சில்
ஈடுபடுவதை விரும்பாத சீனா, இலங்கைக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பும் வழங்கி  நார்வேயின்
 முயற்சியை தோற்கடித்துள்ளது.

12. அமெரிக்காவின் பசிபிக் ராணுவ வலிமையை கட்டுப்படுத்தவும், இந்திய பாதுகாப்புக்கு கேள்விக்குறி
 ஏற்படுத்தவும்,போர் ஏற்பட்டால் மிக விரைவான தாக்குதலை துவங்கி அதிக சேதத்தை இந்தியாவுக்கு
ஏற்படுத்தவும் இலங்கையில் அமைக்கப்படும் தளம் மிக உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலும்
 சீனா இலங்கைக்கு முழு ஆதரவை தந்துவருகிறது.

13. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்தியா தான் சொல்வதைக்கேட்டே ஆகவேண்டும் என்பதை
புரிந்துகொண்டுள்ள இலங்கை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான சில நகர்வுகளை தொடர்ந்து
வெளிப்படுத்துவதன் மூலம் இந்தியாவிடமிருந்து பல்வேறுவகையிலான பல நன்மைகளை கேட்காமலே
பெற முடியும்.

  



                                                                         

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்