வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 19 செப்டம்பர், 2011

பயணிகளைஅனுமதிக்க நடவடிக்கை


அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்,
தனியார் பஸ்
உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற அமைதிப்
பேச்சுவார்த்தைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கொடுமுடி பகுதி பயணிகளை ஈரோடு- கரூர் பஸ்நிலையங்களில் பஸ்ஸில் ஏற்ற
மறுப்பதைக் கண்டித்தும்,  அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்தும், கொடுமுடி பகுதி பயணிகளை பஸ்ஸில் ஏற்ற வலியுறுத்தியும்
செப்.17-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுமுடியில் சாலை
மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
  இதனைத் தொடர்ந்து ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலவன்
தலைமையில் அமைதிப் பேச்சுவார்ததை கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர்
என்.கலாமோகன் முன்னிலை வகித்தார். சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு
உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார்.
   முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, மாவட்ட மதிமுக அவைத்தலைவர்
வழக்குரைஞர் பி.எம்.குழந்தைவேல், ஒன்றிய அதிமுக செயலாளர் புதூர்கலைமணி,
இந்திய கம்யூளிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் ஆ.ராஜசுப்ரமணியன்
உள்ளிட்டோர் பேசினர்.
   கொடுமுடி பகுதி பயணிகளை ஈரோடு மற்றும் கரூர் பஸ்நிலையங்களில் இருந்து
ஏற்றிவர ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்ற மறுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது புகார் வரும்
பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய வழித்தடத்தில் இயங்காத
பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க
பஸ்நிலையங்களில் கூடுதலாக டிக்கெட் பரிசோதகர்கள்
நியமிக்கப்படுவார்கள் என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
   திருச்சிமண்டல கோட்ட மேலாளர் செல்வக்குமார், ஈரோடு மண்டல் கோட்ட
மேலாளர் கே.சேனாதிபதி, மற்றும் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, பிஜேபி,
விடுதலை சிறுத்தைகள், உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு, பஸ்நிலைய
வியாபாரிகள் சங்கம், வரிசெலுத்துவோர் சங்க உள்ளிட்டவைகளின் நி்ர்வாகிகள்
மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

                                                                  

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்