வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 22 செப்டம்பர், 2011

பொறுப்பற்ற விஞ்ஞானிகள்.. பொல்லாத மக்கள்..

தமிழ்படம் ஒன்றில் வானிலை அறிவிப்பு பற்றி ஒரு காமெடி வரும்.

அந்த காமெடியில்...

வானிலை அறிவிப்பு கூறுபவர்  மழை பற்றிய அறிவிப்பைக்கூறும்போது இரண்டுவிரல்களில் ஒன்றை தொடச்சொல்லி

மழை வருவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

   இந்த சம்பவம் திரைப்படத்தில்   வந்தததுதான் என்றாலும்  நிஜத்தில் இது போன்ற அலட்சியமான செயல்கள்

இருக்கக்கூடாது என இத்தாலி மக்கள் விரும்பினர்.

அதனால்  பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் அந்நாட்டு புவியியல் விஞ்ஞானிகள்

மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சம்பவம் இது தாங்க:  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
----------------------------
இத்தாலியில் உள்ள லாகூய்லா என்ற பிரதேசத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 2009 ஏப்ரல் மாதம் 6 ம் தேதி

ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 300 பேர் மரணமடைந்தனர்.
  
இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே அங்கே  பல முறை சிறிய அளவிலான

நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அடுத்த சில நாட்களில் வரவிருக்கும்

பூகம்பம் குறித்து மக்களுக்கு எந்த எச்சரிக்கையையும் விடவில்லை.இதனால்

அடுத்து வந்த பூகம்பத்தில் மக்கள் இறக்கவேண்டி வந்தது.
   
 விஞ்ஞானிகளின் செயலால் அதிருப்தி அடைந்த மக்கள் விஞ்ஞானிகள்

தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என

நீதி மன்றத்தின் கதவுகளை தட்டிவிட்டனர்.
 
 வழக்கு நடக்கிறது.... உலகம் பார்க்கிறது...ம்... இதெல்லாம்...அங்கதாங்க நடக்கும் என நீங்கள்

சொல்வது கேட்கிறது.
   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்