வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 21 செப்டம்பர், 2011

அணு உலை பணியை நிறுத்தக்கோரி அமைச்சரவை முதல்பதிவு.





 கூடங்குளம் அணு உலை திட்டப்பணிகளை கைவிடக்கோரி தமிழக அமைச்சரவை முடிவு
எடுக்கிறது.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதப்போராட்ட குழுவிடம்
உறுதி அளித்துள்ளார்.

   கூடங்குளம் அணு உலைதிட்டப்பணிகளை கைவிடக்கோரி கடந்த
11 நாட்களாக அந்தப்பகுதி மக்கள் தொடர் <உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்துக்குதமிழக அரசியல் கட்சிகள் பல ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரதம் இருந்த மக்களை சந்தித்து பேசினார்.

  பிறகு இன்று செப்21 ம்தேதி தமிழக முதல்வரையும் சந்தித்துப்பேசினார். இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவைபோராட்டக்குழுவினர் மருத்துவர் உதயகுமார் தலைமையில் சந்தித்தனர்.
அப்போது குழுவினர் கூடங்குளம் அணு உலை பணியைகைவிடக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என முதல்வரை கேட்டுக்கொண்டனர்.

 இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் நாளை  செப்22 ம்தேதி  அமைச்சரவையை கூட்டி இதற்கான முடிவை
எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
   
                ""இதற்கிடையே கூடங்குளம் அணு உலையை மூடினால்..ரஷ்யா இந்தியாவில்

செய்துவரும் பல திட்டப்பணிகள் கடுமையான பாதிப்பை அடையும்.

 இந்தப்போராட்டம்துரதிஷ்டமானது.

 அணு உலை குறித்து மக்கள் பயப்படுவது புரிகிறது.

அச்சத்தை போக்குவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், அணுசக்திதுறைக்கும் உள்ளது.

அதனை அவர்கள் செய்யவேண்டும்.''

 என இந்தியாவுக்கான ரஷ்யதூதரக அதிகாரி கர்மலிடோ
கூறியுள்ளார்.                                                            

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்