வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

திருடப்பட்ட டைட்டானிக் நெக்லஸ்...







கடந்த 1912 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்குக்கு...     
மூழ்காத கப்பல் என்ற முழக்கத்துடன்
2224 பயணிகளுடன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது டைட்டானிக்கப்பல்.
    ஏப்ரல் 15 ம்தேதி அட்லாண்டிக் கடலின் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
   நடந்த  இந்த விபத்தில்  கப்பலில் பயணித்த
பயணிகளில் 1514 பேர் பரிதாபமாக உயிரை விட்டனர். நீண்டநாட்களுக்கு பிறகு... மூழ்கிய கப்பலில்
இருந்து பல்வேறு மதிப்புமிக்க பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டது.

 இப்படி எடுக்கப்பட்ட பொருட்களில் இந்தக்கப்பல் மூழ்கியபோது அதில் பயணம் செய்த அமெரிக்க
பெண்மணி எலினார் என்பவரின் உடமையாக கருதப்படும்  ஒரு நெக்லசும் மீட்கப்பட்டது.

    இந்த நெக்லஸ் மற்றும் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பல பொருட்கள் இவை அனைத்தையும்
சேர்த்து டென்மார்க்கில் உள்ள ஹோபன்ஹேகன் நகரில் உள்ள ஒரு பொருட்காட்சி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ் மட்டும் காணாமல் திருடப்பட்டுள்ளது.

 12 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடையதாக கருதப்படும் அந்த நெக்லசை தற்போது போலிசார் தேடிவருகின்றனர்.                                                      

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்