வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 19 செப்டம்பர், 2011

எழுமாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு...






    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ளது. புதுக்காலனி

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்த காலனியில் 80 க்கும் மேற்பட்ட

குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர்.

காலனி அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த காலனி மக்களுக்கு

 இதுவரை அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை வசதி,

உள்ளிட்டவைகள் அமைத்து தரவில்லை.

தவிர இந்த காலனியில் வசித்துவரும் மக்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

வீட்டுக்கு ஒரு நவீன கழிப்பிடம் அமைக்க ஊராட்சி சொல்லியது.

கழிப்பிடம்அமைக்கதேவையான நிதியை அரசு ஒதுக்கிதந்துள்ளது.

 மக்களும் கழிப்பிடங்களைஅமைத்துக்கொண்டனர்.

ஆனால் இன்றுவரை அந்த மக்களுக்கு கழிப்பிடம் அமைத்ததற்கான நிதியை

ஊராட்சி நிர்வாகம் தரவில்லை.

 இதனைக்கண்டித்தும்  அடிப்படை வசதிகளை அமைத்துதரக்கோரியும்

இன்று எழுமாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மற்றும் தீண்டாமை

ஒழிப்பு முன்ணனி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ணனியின்

ஈரோடு மாவட்ட தலைவர் அண்ணாதுரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்

ஈரோடு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, தாலுகா செயலாளர் சத்தியானந்தன், ரவிக்குமார், கார்த்தி உள்ளிட்டோர்

கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பு தங்கவேல் செய்திருந்தார்.                                                                   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்