வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அணு உலைகளை..




தமிழகத்தில்.....
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளை மூடவேண்டும். மேற்கொண்டு அங்கு புதிய
அணு உலைகளை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடந்துவருகிறது.

  இந்தப்போராட்டம் 10 வது நாளை தொட்டுள்ள நிலையில் இந்தப்பிரச்சினையில் மத்திய அரசு  அக்கறைகாட்டவேண்டும்
மக்களிடம் சுமூக உணர்வு ஏற்படும் வரை அணு உலை பணிகளை தள்ளிவைக்கவேண்டும் என்று பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

   மேலும் இது குறித்து பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது வலியுறுத்தினார். பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சியினர்
கொண்ட குழு ஒன்றை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் அனுப்பி வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தார்.

   பிரதமர் நியூயார்க் செல்லவிருப்பதால் இது குறித்து மக்களிடம் பேச அமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு
தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜெயலலிதாவிடம் பிரதமர் குறிப்பிட்டார்.

  இதன்படி மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்தார். தமிழக தலைமை செயலாளர் சாரங்கியை
 சந்தித்தார்.

   அதற்கு முன்னர் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாராயணசாமி“ அணுமின் உலைகளால் பாதிப்பு வராது
என்பதை மக்களை சந்தித்து கூற உள்ளேன்.அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான முடிவை பிரதமர் தான்
எடுப்பார்.

   இது குறித்து தமிழக முதல்வரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜப்பான் அணு உலைகளுக்கு நில நடுக்கத்தால் நிகழ்ந்த பாதிப்பைக்கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அமைக்கப்பட்ட அணு உலைகள் தரம் மிக்கவை.
 பாதுகாப்பனவை.

                                                             

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்