வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

சிவகிரியில் தி.மு.க கருத்துக்கேட்புக்கூட்டம்.

 சிவகிரி மகாமாரியம்மன்கோயில் திருமணமண்டபத்தில் இன்று தி.மு.க மாநில நெசவாளர் அணியின் சார்பில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம் தலைமை வகித்தார். கொடுமுடி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நடராஜன், கொல்லங்கோயில் பேரூர் செயலாளர் சந்திரசேகர், சிவகிரி பேரூர் செயலாளர் கோபால், ஒன்றிய துணை செயலாளர் பாபுராஜா, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 

‘‘நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் கடந்த 20 ஆண்டுகளாக  மாறாமல் உள்ளது அதனை மாற்றித்தரவேண்டும். கைத்தறி ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன அவற்றை தடை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு அச்சு,மற்றும் நாடாக்களை முன்பிருந்ததுபோல அரசே வழங்கவேண்டும். விலைவாசிக்கேற்ப கூலி உயர்வு வழங்கவேண்டும். நெசவாளர் நல காப்பீட்டுத்தொகையை அதிகரித்து அதனை செயல்படுத்தவேண்டும்.  சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் கருணை தொகைய  ரூ6 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 கைத்தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழான மானிய தொகையை ரூ5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கவேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  மனுக்களை நெசவாளர்கள் மற்றும் கைத்தறி சங்க பணியாளர்கள் அளித்தனர்.’’




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்