வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

தொகுதியின் தேவைகள் என்ன ? சட்டப்பேரவையி்ல் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பேச்சு.

 தமிழக சட்டபேரவையின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மொடக்குறிச்சி பா.ஜக எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: 

மொடக்குறிச்சி தொகுதியில்  உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும். மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியி்ல் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி தரவே

ண்டும்.

 பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி. அரசு மருத்துவ கல்லூரியில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தவேண்டும். 

அம்மா மினிகிளினிக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கவேண்டும்.

 ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் ஈரோட்டில் ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க மாநில அரசு முயற்சிமேற்கொள்ளவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில் தென்னை மற்றும் அதன் விளைபொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும், 

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியி்ல் விவசாய உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன்நதி என அழைக்கப்படும் குரங்கன்பள்ளம் ஓடையினை தூர்வாரி தடுப்பணைகள் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டத்தில் உள்ள கொடுமுடி முதல் நாமக்கல்மாவட்டத்தில் உள்ள பிலிக்கல் பாளையம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் உள்ள சத்திரம் பகுதியில் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் ஈரோடு கரூர் ரயில்வே சாலையை கடந்து செல்ல புதிய சாலை அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடிவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள காசிபாளையம் ஊர்பொதுமக்கள் மயானத்துக்கு சென்றுவர புகளூரான் வாய்க்கால் வழியாக பாலம் அமைக்கவேண்டும்.

 கொடுமுடி தாலுக்காவில் உள்ள கருவேலம்பாளையம் மற்றும் ஊஞ்சலூர் வெள்ளியம்பாளையம் இடையே கதவனை அமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சொக்கநாச்சிஅம்மன்கோயி்லுக்கு செல்லும் வழியில் பழுந்தடைந்த நிலையி்ல் உள்ள மண்பாலத்தை சீரமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்கா ஊஞ்சலூரில் உள்ள வள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தினை அகலப்படுத்தவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள பாசூரில் ரயி்ல்வே பாலம் அமைக்கவேண்டும். கொமுடிவட்டத்தில் உள்ள வெற்றிக்கோனார்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில்  தாலுக்கா விளையாட்டு உள் அரங்கம் அமைக்கவேண்டும்.  பூந்துறை குளத்தினை சுற்றுலாத்தலமாக அமைக்கவேண்டும். 

கொடுமுடியில் பழமைவாய்ந்த மற்றும் மும்மூர்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் திருக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மீக சுற்றுலாதலமாக அமைக்கவேண்டும்.  

தமிழக விவசாயிகளுக்கு ஆட்கள் கூலி உயர்ந்துவிட்டதால் விவசாயம் செய்ய சிரமமாக உள்ளது. இதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் ஆட்களை விவசாய வேலை செய்ய உதவி செய்தால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பெரும்  உதவியாக இருக்கும். 

மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய விளைபொருட்களான வாழைக்காய் மண்டி மஞ்சள் மண்டி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைக்கவேண்டும்.

 வளந்தான்கோட்டையில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை உள்ளது. அதற்கு பத்து வருடமாக கட்டிடம் இல்லாமல் தனியார் கட்டிடத்தில் உள்ளது. இதற்கு அரசு கட்டிடம் அமைக்கவேண்டும்.

 சிவகிரி கிராமம் சிலுவம்பாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைய புதிய கட்டிடம் அமைக்கவேண்டும் என்று பேசினார்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்