வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 11 நவம்பர், 2013

கோமாரிநோயினால் ஒரு மாடுகூட பாதிக்கப்படக்கூடாது: அமைச்சர் உத்தரவு.



 ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோமாரி நோய்  கிளர்ச்சி
விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புதுறை இயக்குனர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை மருத்துவர்களிடம் அமைச்சர் சின்னையா கோமாரிநோய் பாதிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
 தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட <உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகளை பார்வையிட்டு மாடுகளை வளர்ப்போரிடம் நோய் தாக்கம் மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மருத்துவர்களின் சிறப்பாக செயல்பாட்டால் கோமாரி நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான மாடுகளை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். மேலும் இத்தகைய கால்நடைகளுக்கு சிறப்பு கவனம் மேற்கொள்ளவேண்டும். இம்மாடுகளுக்கு கோமாரிநோயினால் வாயில் புண் உள்ளதால் பசுந்தீவனங்களை இம்மாடுகள் உட்கொள்ளாது. எனவே திரவ உணவாகிய ராகிகூழ் வழங்கவேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக கூடும். மேலும் மூலிகை மருத்துவம் மூலம் இந்த நோய் சிறந்த முறையில் கட்டுப்பாட்டிற்குள் வரும். இது கால்நடை மருத்துவர்களம் மூலம் மாடுகள் வளர்ப்போருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இனிமேல் ஒரு மாடு கூட கோமாரி நோயினால் பாதிப்படையா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த நோய்க்கான  சிகிச்சைகள் அளிக்கும் மருத்துவர்களுக்கு  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உதவிட வேண்டும்.

 நோய் பாதித்த பகுதிகளில் கிருமிநாசினியான பிளிச்சிங் பவுடர் தூவிட  ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

இறந்த மாட்டை முறையாக புதைக்கவேண்டும். நோயை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு மாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாடுகள் வளர்ப்போர் தற்சமயம் வெளியூர்களிலிருந்து மாடுகளை வாங்கக்கூடாது. கோமாரி நோய் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டுசெல்லவேண்டும்.

தமிழக முதல்வர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 167 கால்நடை மருந்தக புதிய கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்.
 கடந்த இரண்டு ஆண்டுகளில் 700 கால்நடை ஆய்வாளர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கால்நடை தீவன பொருட்களுக்கு அரசின் சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில எல்லையில் சோதனை சாவடி அமைத்து வெளிமாநிலங்களில் இருந்து வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 இவ்வாறு அவர் பேசினார்.

 முன்னதாக கோமாரி நோய்  தாக்கிய பகுதிகளான மேட்டுப்பாளையம், சுத்துக்கரடு, ஆலிச்சாம்பாளையம், தயிர்பாளையம், மூலக்கரை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த  மாடுகள் வளர்ப்போரிடம் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குநர் வணங்காமுடி, துணை மேயர் பழனிசாமி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.ராமசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்