வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 11 நவம்பர், 2013

மாற்றுதிறனுடைய பள்ளிக்குழந்தைகளுக்கு உபகரணங்கள்



 


  ரோடு மாவட்டத்தில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  4 ஆயிரத்து 965 பேர் பள்ளி வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளாக கண்டறியப்பட்டனர்.

 இம்மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு  கடந்த ஜீலை மாதம் 22 ம்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி வரை  14 ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 ஒன்றியங்கள் என 20 ஒன்றியங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

 இம்முகாம்கள் மூலம் 2 ஆயிரத்து 429 மாற்றுத்திறன் கொண்ட பள்ளி வயது குழந்தைகள் பயன்பெற்றனர். முகாம்களில் பங்கேற்றவர்களில் 726 பேருக்கு உதவி உபகரணங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.ரூ 2 லட்சத்து 41 ஆயிரம்  மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த உபகரணங்களை முதல்கட்டமாக ரூ79 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை 17 மாற்றுத்திறன் கொண்ட பள்ளிவயது குழந்தைகளுக்கு ஈரோடு  மாவட்ட ஆட்சியர் சண்மும் வழங்கினார்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்