வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 16 நவம்பர், 2013

பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.

பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.
  
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நகரசாலை ரூ22.46 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாறுகிறது.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில் தற்போது இரு வழி சாலை உள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்ததை  அடுத்து ரூ22.46 கோடி மதிப்பீட்டில்  7.10 கி.மீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இதன் துவக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்  பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தற்போது 23 அடி அகலத்தில் உள்ள இந்த பாதை 50 அடி அகல சாலையாக மாற்றப்படுகிறது. தவிர பெருந்துறை பாலிடெக்னிக்கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட அரசு ரூ33.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் இரண்டாண்டுகால ஆட்சியில் பெருந்துறை சட்ட மன்ற தொகுதிக்கு ரூ67.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஊத்துக்குளியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 228 குடும்பங்களுக்கு காவிரி தண்ணீர் வழங்க ரூ27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய்கோட்டாட்சியர் குணசேகரன், வெட்டையங்கிணறு தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தசாமி, பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் ஜெகதீஸ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் ஜானகி குப்புச்சாமி,துணைத்தலைவர் மோகன்குமார், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சாமிநாதன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கருப்பசாமி, முன்னாள் எம்.பி, காளியப்பன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்