வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 13 நவம்பர், 2013

கந்துவட்டிக்கொடுமை: இளம் பெண் தற்கொலை. தாயை இழந்து வாடும் தளிர்கள்.



 ரோட்டில் கந்துவட்டிக்கொடுமை
யால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு வளையக்கார வீதியைச்சேர்ந்தவர் சுரேஷ்(35) கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(31) இவர்களுக்கு அஸ்வின்(13) ப்ரீத்தி(8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


விஜயலட்சுமி சேலை வியாபாரம் செய்து வந்தார். இவரது வியாபாரத்துக்காக  பள்ளிபாளையத்தைச்சேர்ந்த செந்தில் என்பவரிடம் ரூ இரண்டு லட்சம் கடன்வாங்கியிருக்கிறார். இந்த தொகையில் ரூ 60 ஆயிரத்தை வட்டிக்கு என முதலிலேயே பிடித்தம் செய்துகொண்ட செந்தில் மீதி ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை தந்துள்ளார். இந்தப்பணத்தை நூறுநாட்களில் தினந்தோறும் இரண்டாயிரம் என திருப்பி தந்துவிட வேண்டும் என்பது நிபந்தனை.

இதன்படி பணத்தை திருப்பி செலுத்தி வந்த விஜயலட்சுமி ரூ13 ஆயிரம் மட்டும் பாக்கித்தொகை செலுத்தவேண்டியிருந்துள்ளது.

இந்த நிலையில் இந்த தொகையை உடனே செலுத்தவேண்டும் எனக்கோரி செந்தில் விஜயலட்சுமியை அவனமானப்படுத்தியாக தெரியவருகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி கடந்த 8 ம்தேதி விஷம் தின்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


சிகிச்சை பயனின்றி விஜயலட்சுமி இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
பரிசோதனைக்கு பின்னர் விஜயலட்சுமியின் உடலை பெற மறுத்து மறியல் செய்துள்ளனர்.


கந்துவட்டிக்கொடுமைக்கு உள்ளாக்கிய செந்திலை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடந்துள்ளது.

http://youtu.be/qw3O8tsHa1c
இது குறித்து ஈரோடு டவுன் போலிசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
சம்பவம் குறித்து ஈரோடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்