வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 9 நவம்பர், 2013

ஈரோடு கோவை மாவட்டங்களில் ரூ4 ஆயிரத்து 200 கோடி மோசடி

.



       டந்த இருபதாண்டுகளில் ஈரோடு ,  கோவை
ஆகிய மாவட்டங்களில் மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் ரூ 4 ஆயிரத்து 200 கோடியை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை  இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர்களுக்கான சிறப்பு கூட்டத்தில் அதிகாரி கூறினார்.
 ஈரோடு மாவட்டம் சிவகிரியில் எல்.ஐ.சி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சிவகிரி கிளையின் மேலாளர் ரபியுதீன் தலைமை வகித்தார். கோவை கோட்டத்தைச்சேர்ந்த        எல்.ஐ.சி கிளை மேலாளர் கிரிமாணிக்கவாசகம் பேசினார்.

அவர்பேசியதாவது: கடந்த இருபது ஆண்டுகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மக்களின் பணம் ரூ4 ஆயிரத்து 200 கோடியை மோசடி நிறுவனங்கள் பெற்று ஏமாற்றியுள்ளன.

ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த வங்கிகளில் பொதுமக்கள் ரூ52ஆயிரத்து 200  கோடியை டெபாசிட்டாக வைத்துள்ளனர்.
 இது சேமிப்பின் மீது மக்களுக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது. ஆயுள் காப்பீட்டு துறையில் அடுத்த ஆண்டு முதல்  மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. தற்போது மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிற பல பாலிஸிகள் இந்த மாதம் 15 ம்தேதி முதல் வாபஸ் வாங்கப்பட உள்ளன.

 நவம்பர், டிசம்பர் மாதத்துக்குள் முகவர்கள் தங்களது வணிகத்தை சிறப்பாக செய்து தங்களது நிலையை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.
முகவர்கள் பொதுமக்களை சந்தித்து  தற்போது நடைமுறையில் உள்ள பாலிஸிகள் அனைத்தும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி டிசம்பர் மாத முடிவிற்குள் வாபஸ் வாங்கப்படுகிறது என்ற தகவலை தெரியபடுத்தவேண்டும்.

என்பது உள்ளிட்ட தகவலை  முகவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கூட்டத்தில்  50க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்