வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 27 ஆகஸ்ட், 2011

விடுதலைப்புலிகளின் விமானங்கள் திணறும் இலங்கை புலனாய்வு துறை.

                                                                       
                           விடுதலைப்புலிகளின் விமானங்கள்

                           திணறும்  இலங்கை புலனாய்வு துறை.

 தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மொத்தம் 4 விமானங்கள் இருந்ததாகவும், அதில் ஒன்று கிளைடர் விமானம் என்றும்

 அறியப்படுகிறது.

இறுதி யுத்தத்தின்போது கொழும்புநோக்கி இரண்டு விமானங்கள் சென்றபோது அவை அழிந்ததாகவும், கூறப்படுகிறது.

 இந்த நிலையில் புலிகளிடம் இருந்த மற்ற இரு விமானங்களைத்தேடும் பணியை

இலங்கையின் புலனாய்வு பிரிவு முடுக்கி விட்டிருந்தது.

 இது வரை அந்த இரண்டு விமானங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் வான் பரப்பில் பத்து அமெரிக்க போர்விமானங்கள் பறந்ததாகவும்

 அவை இலங்கையின் அனுமதியின்றி பறந்ததாகவும், பசிபிக் பெருங்கடலில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த  அமெரிக்காவின் போர்கப்பலில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்கள்

 இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி பறந்தன  என்று இலங்கை அரசால் கூறப்பட்டு வந்ததது.

  இலங்கையின் சிவில் விமானத்துறையின் ரேடார் பார்வையில் அமெரிக்க விமானங்கள் பறந்தது தெரிந்ததாக

 இலங்கை விமானப்படை உறுதி செய்திருந்தது.

இது குறித்த மறுப்பை அமெரிக்க தரப்பு கூறியபோது

 இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் 200 கடல் மைல்

தொலைவு வரை கண்காணிக்ககூடியவை அந்த எல்லை வரை நாங்கள் கண்காணிப்போம் என்று இலங்கையின்

 விமானப்படை செய்தியாளர் தரப்பில்   பதில் தரப்பட்டது.

  அமெரிக்காவுக்கு இது குறித்த எரிச்சல் ஏற்பட்ட நிலையில் இலங்கை மந்திரி பேசும் போது இலங்கையின்

  கடல் எல்லை12 மைல் தொலைவு வரையே  உள்ளது.

அமெரிக்கவிமானங்கள் அந்த எல்லைக்குள் அப்பால் தான் பறந்ததாக கூறினார்.

         சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட ரேடார்கள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின் றன.


 இவை இரண்டுமே குறுகிய  மற்றும் தாழ்வான  தொலைவு வரை மட்டுமே

 கண்காணிக்கும் திறன் பெற்றவை.

இந்த நிலையில் தாங்கள் எங்கு பறக்கிறோம், என்பது உள்ளிட்ட தகவல்களை அறியத்தருகிற

அதிநவீன வசதிபடைத்த அமெரிக்கபோர்விமானங்கள்

ரேடார்களின் கண்னுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவை அவை இலங்கையின்

ரேடார் பார்வைக்குள் சிக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது.


  எது எப்படி இருந்தபோதிலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில்    இருந்து இந்து மகாசமுத்திரத்தை நோக்கி
அமெரிக்கபோர்கப்பல் நகர்ந்தபோது அமெரிக்கவிமானங்கள் பறந்ததாக சொல்லப்பட்ட இந்த நிகழ்வுகளில் ஒரு வித அசைவு தெரிவதாக அறியப்படுகிறது.

      தற்போது இலங்கை தனது கடல் படையையும், விமானப்படையையும் பலப்படுத்திவருவது,...

இலங்கை இறுதி யுத்தத்தின்போது நடந்துகொண்ட முறையையும், தற்போது நடந்துவரும் நிலையையும்

பார்க்கும்போது அது ஏதோ ஒரு வித பீதியில் உறைந்திருப்பதை அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்