வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தங்கத்தை காலி செய்து தலைமறைவான அதிபர்..

                                                  
                                தங்கத்தை காலி செய்து தலைமறைவான அதிபர்...

லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக நீடித்தவர் கடாபி. இவரை பதவி விலககோரி அந்நாட்டு

கிளர்ச்சியாளர்கள் 7 மாதங்களாக போராடி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்தை நேட்டோ நாடுகள் அங்கீகரித்ததுடன் தங்களது நாட்டு

போர்விமானத்தாக்குதல்களையும் செய்து உதவி வருகின்றனர்.

 இந்த நிலையில் லிபியாவின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றிய

 கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியையும் கைப்பற்றியது.

   தலைநகர் கிளர்ச்சியாளர்கள் வசமானதை அடுத்து அதிபர் கடாபி தலைமறைவானார்.

அவரை தேடும் பணியில் கிளர்ச்சி படை, தலைநகரை சல்லடைபோட்டு சலித்துவருகிறது.

அதிபர் வசித்த மாளிகைக்குள் புகுந்த கிளர்ச்சி படையினர் ...

அமெரிக்க வெளியுறவு முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ் மீது  அதிபர் கடாபி ஒரு தலைக்காதல்

கொண்டு ரைஸ்ஸின் படங்களை ஆல்பமாக சேகரித்திருந்ததை கண்டு அதிசயத்தனர்.


   இந்த நிலையில் லிபியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் பங்தரா அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

லிபியாவின் வசம் தற்போது தங்கத்தின் கையிருப்பு 8 லட்சம் கோடி உள்ளது.

தலைநகர் திரிபோலியில் இருந்த 45 ஆயிரம் கோடி மதிப்பிலான

 தங்கத்தை தலைமறைவான அதிபர் கடாபி துடைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்