வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 5 நவம்பர், 2013

பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அனுமதிக்கவேண்டும்.

 

 ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு
உதவிபெறும் அனைத்துப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை புகுத்த அரசு அனுமதி தரவேண்டும் என ஈரோடு மாவட்ட நிதியுதவி பெறும் பள்ளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு மதரஸா துவக்கப்பள்ளி அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு மதரஸா பள்ளியின் தாளாளர் முகம்மது தாஜ் முகைதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சி.எஸ்.ஐ பள்ளிகளின் நிர்வாகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
http://youtu.be/oxej_PQwy8I

 தமிழக முதல்வர்  ஆங்கில வழிக்கல்வியை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2011-12 ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கில வழிக்கல்வியை தமிழ்வழிக்கல்விக்கு இணையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  இந்த முறை அரசு நிதியுதவி பெறும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை பள்ளிகளுக்கு இவ்வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் கல்வித்துறை சட்டதிட்டங்கள், விதிமுறைகள், அரசின் ஊதிய நிர்ணயம், விலையில்லா சீருடை, புத்தகம் போன்ற அனைத்து நலத்திட்டங்களையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு அனுமதித்திருப்பதைப்போலவே ஆங்கில வழிக்கல்வியை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் தொடங்க அனுமதி வழங்கிட வேண்டும்.

 என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்புவது.

அத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும்,  கல்வித்துறை அதிகாரிகளுக்கும்  கோரிக்கை மனுக்களை அனுப்பி வைப்பது என தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்