வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 8 நவம்பர், 2013

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி கதர்துறை செயலர் ஆய்வு.


 ஈரோட்டில் பொங்கலுக்குள் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியை முடிக்கவலியுறுத்தி கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறிதுறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில கைத்தறிமற்றும் துணிநூல் துறை இயக்குநர்முத்துவீரன் தலைமை வகித்தார். கோ ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  கொள்முதல் மற்றும் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் சங்க வாரியான உற்பத்தி முன்னேற்றம்  ஆகியவை குறித்தும் கைவினை துணிநூல் மற்றும் கதர்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆய்வு செய்தார்.

விலையில்லா வேட்டி சேலைகளை உற்பத்தியினை உரிய காலத்துக்குள்  முடிக்கவேண்டும், சேலையின் தரம் மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள், மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்