வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 5 நவம்பர், 2013

ரூ29.10 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவிகள். வருவாய்துறை அமைச்சர் வழங்கினார்.

          ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியில்  தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பயனாளிகளுக்கு ரூ29.10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் பெண்களின் வேலைப்பளுவை குறைத்திடும் வகையில்  விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி தற்போது  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள்  அதிகாரிகளைத்தேடி சென்ற காலம் மாறி, மக்களைத்தேடி வருவாய்துறையினர் அம்மா திட்டம் என்ற பெயரில் வரும் காலம் வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகிறார்கள். தமிழக மக்களின் சிரமத்தை போக்க முதல்வர் மண்சாலைகளை தார்சாலைகளாக மாற்றியமைத்து வருகிறார்.

 ஈரோடு மாவட்டத்தில் இது வரை  ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 703 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதனை பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பராமரித்திட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்