வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 2 நவம்பர், 2013

ஆதரவற்றவர்களுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடத்திய அறக்கட்டளை

                               
 ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காகம்
அறக்கட்டளையினர் ஆதற்றவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டம் நடத்தினர்.
கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் அனாதைகள், உடல் மன வளர்ச்சி குன்றியவர்கள்  என 200 பயனாளிகள் கலந்துகொண்டனர்.

காலை8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த கொண்டாட்டம் நடந்தது. காகம் அறக்கட்டளையினர் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் அரசு பள்ளியைச்சேர்ந்த  ஏழை மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு புது உடைகள், மற்றும் அருசுவை உணவுகள், ஊன்றுகோல், சக்கர நாற்காலி, கல்வி உபகரண பொருட்கள், புத்தகங்கள், வழங்கப்பட்டன.

 இவற்றை வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை வடிவுக்கரசி, ஈரோடு  மக்கள் சிந்தனைப்பேரவையின் நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன்  வழங்கி பேசினர்.shttp://youtu.be/VXM9103NYWs
ஆதரவற்றவர்களுக்காக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக தீபாவளி கொண்டாட்டம் நடத்தி வரும் இந்த காகம் அறக்கட்டளையின் அங்கத்தினர் அனைவரும் ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் வலிமையான பொருளாதார பின்புலம்இல்லாமலும் அரசியல் அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இந்த சேவையை செய்து வரும் இந்த அமைப்பினரின் செயல்பாடு  மக்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்