வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 8 நவம்பர், 2013

இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு இல்லை. மாவட்டத்துக்குள் கால்நடைகள் வருவதை தடுக்கவேண்டும்.

                                 
                                                     
ரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 
மாவட்டத்தில்  கால்நடைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்திவரும் கோமாரிநோய் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக்குழுக்கூட்டம் நடந்தது.

 கூட்டத்திற்கு மாவட்ட கால்நடை பராமரிப்பு துணை இணை இயக்குனர் டாக்டர் வணங்காமுடி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில்  கோமாரிநோயினால் அதிகப்படியான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோமாரிநோய் என்பது ஒரு வகையான அம்மைநோய் இதன் தாக்கம் மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த நோய் வந்தபின்னர் பல கால்நடைகள் தொண்டை அடைப்பான் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடாமல் இருப்பது, சினையாக உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் தடுப்பது, தடுப்பூசிமுகாம்கள் நடக்கும்போது முகாம்களுக்கு கால்நடைகளை கொண்டுவராமல் இருப்பது, என்பதுடன்  கால்நடைகளுக்கு போதுமான அளவில் சத்துணவு கிடைக்காமல் இருப்பது ,நோய் தொற்று ஏற்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளுடன் சேர்த்து வைத்திருப்பது,ஆகியவை  இந்த நோய்கள் வரக்காரணங்களாக உள்ளன.
எனவே இந்தக்காரணங்கள்மீது பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

 தவிர கால்நடைத்துறையை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பரவிவரும் கோமாரிநோய்கு உடனடி சிகிச்சை தருவதுடன், தடுப்பூசி போடாமல்  உள்ள கால்நடைகளுக்கு உடனே தடுப்பூசி போடுவதில் விரைந்து கவனம் செலுத்தவேண்டும்.  மாவட்டத்திற்குள் வரும் பிற மாவட்ட கால்நடைகளை பரிசோதித்து  மாவட்த்திற்குள் நுழையமால் தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட  அறிவுரைகளை கால்நடைதுறை அலுவலர்களுக்கு  வழங்கிய டாக்டர் வணங்காமுடி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் அதிகமான கால்நடைகள் கோமாரிநோயினாலும் தொண்டை அடைப்பான்நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது வரை மாவட்டத்தில் இந்த நோயினால் 22 கால்நடைகள் இறந்துள்ளன. 47 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளின் வாயில் உமிழ்நீர் அதிகமாக காணப்பட்டாலோ, அல்லது கால்களில் நொண்டுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து கோமாரி நோய் அல்லாத பாக்டீரியா கிருமியினால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 இதனை தவிர்த்தால் கால்நடை உடனடியாக இறக்கு நேரிடும். கோமாரி நோயின் தாக்கத்தால் பத்து சதவிகித கால்நடைகள் மட்டுமே இறக்கின்றன. மீதி 90 சதவிகிதம் பிற நோய்களினால் தான் இறக்கின்றன. தடுப்பூசி போடுவதை தடுப்பதனால்  நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பிறநோய்களினால் பாதிக்கப்பட்டு கால்நடைகள் இறக்கின்றன.

பொதுமக்கள் தங்களது பகுதியில் புதிதாக கால்நடைகளை வாங்குவதோ விற்பதையோ தவிர்க்கவேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்ட கால்நடைகளை தனியாக பிரித்து வைத்து தேவையான சிகிச்சையை அளிக்கவேண்டும்.

குறைந்த விலைக்கு கால்நடை கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் கால்நடைகளை வாங்குவதை  பற்றி ஆலோசிக்கவேண்டும். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளிடம் கன்றுக்குட்டிகளை பால்குடிக்க வைப்பதோ அல்லது அந்த கால்நடைகளில் கறந்த பாலை வெளியில் விற்கவோ கூடாது.
நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் இறந்தால் அவற்றை நீர்நிலைகளில் விடுவதை தவிர்க்கவேண்டும் இதனால் நோய்தொற்று அதிக அளவிற்குஏற்பட வாய்ப்புள்ளது.

இறந்த கால்நடைகளை புதைக்கவேண்டும், அல்லது எரிக்கவேண்டும். தமிழக அரசு  கோமாரி நோய்தடுப்பில் போர்கால கவனம் செலுத்துகிறது.

கிராமங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கால்நடைதுறை மருத்துவர்கள் இருப்பர். பத்துபேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குவர்.  தவிர இறந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டு தொகை குறித்து அரசு இது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கால்நடைத்துறை அமைச்சர் கொண்டு செல்வார்.



 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்