வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 6 நவம்பர், 2013

கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.


 ஈரோடு மாவட்டம்  பவானி தாலுக்காவில்
நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ13.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

  ஈரோடு மாவட்டம்   பவானி தாலுகாவில் உள்ளது  காடப்ப நல்லூர் ஊராட்சி. இங்கு சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் நடந்தது.

 முகாமில் 112 பயனாளிகளுக்கு ரூ13.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சண்முகம் வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:  தமிழக அரசு எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ணப்பென்சில்கள், இலவச பேருந்து பயண அட்டை, காலணி, மிதிவண்டி, மடிக்கணிணி வரை அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

 கல்வியால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் தந்து தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும்.

கல்வியால் மட்டும் தான் உயர்நிலைக்கு வர முடியும். கல்வியால் சிந்தனைகள் பெருகும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சியும், பயிற்சியும் வேண்டும். அடுத்த தலைமுறையினை உன்னத நிலைக்கு கொண்டுவர கல்வி மட்டுமே பயன்படும்.

நாம் விவசாயத்திற்காக அதிக அளவு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை அதிக அளவு பயன்படுத்துகிறோம்.

இப்படி பயன்படுத்தும்போது நிலத்தடி நீர்  குறைந்து விடுகிறது. மேலும் ஆழ்குழாய் கிணறுகளும் வற்றிவிடுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நாம் அனைவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு களை அமைத்து மழைநீரை சேமித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்