வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 6 நவம்பர், 2013

நவ 9 ல் ஆறு இடங்களில் மக்கள் குறைகேட்பு கூட்டம். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


 ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ்
உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறை கேட்புக்கூட்டம்  இந்த மாதம் 9 ம்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 6 இடங்களில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பகுதி வட்ட வழங்கல் அலுவலர்கள், குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர், கூட்டுறவு சங்கச்செயலாளர், ஊராட்சி மன்றத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

எனவே இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நியாயவிலைக்கடைகளில் உள்ள குறைபாடுகள், புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம் என  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கூட்டம் நடைபெற உள்ள இடங்கள் விபரம். ஈரோடு தாலுக்காவில் உள்ள எலவமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பெருந்துறை தாலுக்காவில் உள்ள பொன்முடி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், பவானி தாலுக்காவில் உள்ள கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கோபி தாலுக்காவில் உள்ள கருக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், சத்தி தாலுக்காவில் உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், அந்தியூர் தாலுக்காவில் உள்ள வேம்பத்தி ஊராட்சி மன்ற அலுவலகம், ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெறுகிறது.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்