வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 26 அக்டோபர், 2013

சரித்திர சாதனை படைத்துள்ளார் ஜெயலலிதா பொதுப்பணித்துறை அமைச்சர் புகழாரம்.


 ரோடு மாநகராட்சி பகுகளில்35.50 லட்சம் மதிப்பிலான
புதிய திட்டப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாநகராட்சி பகுதியைச்சேர்ந்த நசியனூர் பேரூராட்சியில் அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும்  புதிய திட்டப்பணிகள் துவக்க விழா ஆகியவை நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார்.

 நசியனூர் பகுதியைச்சார்ந்த ஐந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ மாணவிகள் ஆயிரத்து186 பேருக்கு ரூ39.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும் வழங்கியபின்னர்,ரூ35.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:  தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்கா பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்விச்செலவினை அரசு ஏற்றுக்கொள்கிறது. கல்வித்துறைக்கு இந்த ஆண்டு அரசு ரூ17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலணி முதல் விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணிணி வரை அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயன்றால் உயரிய வெற்றியை பெற முடியும். மாணவ மாணவிகள் முயற்சியுடன் படித்து கல்வியில் மேன்மை பெறவேண்டும்.

 கடந்த ஆட்சியில் குடும்பத்திற்காகத்தான் திட்டங்கள் தீட்டப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கி கேபிள் இணைப்பு மூ,ம் மாதந்தோறும் நிரந்தர வருவாய் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆட்சியாளர்கள் தனது  குடும்பத்திற்கு பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்பட்டனர். தமிழக மக்களின் நலனைப்பற்றி கவலைப்பட்டதில்லை.

12 ஆண்டு காலம் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தும் காவிரி முல்லைப்பெரியார் பிரச்சனையில் எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்தவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த குடிநீர் ஆதரமான காவிரியில் நமக்கு உள்ள உரிமையை ஜெயலலிதா போராடி உச்சநீதி மன்ற தீர்ப்பை பெற்று அதனை அரசிதழில் வெளியிட செய்து சரித்திர சாதனை படைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்