வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 24 அக்டோபர், 2013

நம்பிக்கையும், நகர்வும் வாழ்க்கையில் வேண்டும்



ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில்
மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார்.

முகாமில்  மொத்தம் 139 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்கள், திருமண <உதவித்தொகை, கடன் உதவி, காதொலிக்கருவிகள், சக்கரநாற்காலி, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டைகள், அடையாள அட்டைகள், ஆகியவற்றை ஆட்சியர் சண்முகம் வழங்கிப்பேசினார்.


அவர் பேசியதாவது: தமிழக அரசு ஏழை மக்கள் பயன்பெற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலணி முதல் மடிக்கணிணி வரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

 பெண்களுக்காக திருமணநிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவற்றை வழங்குகிறது. அத்துடன் முதியோர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது.

18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் 90 சதவிகிதத்தை நாம் நிர்ணயிக்கிறோம். வாழ்க்கையில் பேராசை கொள்ளக்கூடாது. வாழ்க்கையை நேசிக்கவேண்டும். கடந்த காலத்தை அநுபவ பாடமாக கொண்டும் நிகழ்காலத்தில் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டும் வாழ்ந்திட வேண்டும். வாழ்க்கையில் நிறைவும், அதனைநோக்கி நகர்வும் இருக்கவேண்டும். என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்