வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 26 அக்டோபர், 2013

பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை வருவாய் துறை அமைச்சர் அறிவிப்பு

ரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்களுக்கு
தீபாவளி போனஸ் தொகையாக ரூ31.90 லட்சம் போனஸ் தொகையை அமைச்சர் ராமலிங்கம் வழங்கினார்.

ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பால் வள ஒன்றியத்தலைவர் பி.சி.ராமசாமி, துணைத்தலைவர் சுப்பிரணியன்,ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டு ஆவின் பணியாளர்கள் 406 பேருக்கு ரூ31.90 லட்சம் மதிப்பிலான போனஸ் மற்றும் கருணைத்தொகையினையும் ,2.69 லட்சம் மதிப்பிலான ஆவின் பால் உபபொருட்களையும் வழங்கினர்.

பின்னர் வருவாய்துறை அமைச்சர் பேசியதாவது:  ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் 1976 ம் ஆண்டு துவக்கப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 703 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கங்களில் ஒரு லட்சத்து88 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி போனஸ் தொகையாக ஒன்றிய பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மற்றும்11.67 சதவிகித கருணைத்தொகை என மொத்தம் 20 சதவிகித தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

 பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்பட்டு வருகிறது.  பால் உற்பத்தியாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
 இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்