வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஈரோட்டில் அக்.23,24ம்தேதிகளில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்.



 ஈரோடு மாவட்ட விளையாட்டு  மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பிரிவின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்
அக் 23,24,25 ம்தேதிகளில் நடக்கிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் தெரிவித்துள்ளதாவது: 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கத்தில் வருகிற 23 ம்தேதி நடக்கிறது. இதில் கூடைப்பந்து, கால்பந்து, கபாடி, கைப்பந்து, ஆகிய பிரிவுகளில் ஆண் பெண் இருபிரிவினருக்கும் போட்டிகள் நடக்கின்றன.

இதே போல புஞ்சைப்புளியம்பட்டி கே. ஓ. எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான வளைகோல் பந்து போட்டியும், ஈரோடு கொங்கு இன்ஜியரிங் கல்லூரியில் ஆண்களுக்கான வளைகோல் பந்துப்போட்டியும், நடக்கின்றன.

மறுநாள் 24 ம்தேதி ஆண் பெண் இருபிரிவினருக்கான தடகளம், நீச்சல்,போட்டிகள் வ.உ.சி பூங்கா விளையாட்டரங்கத்திலும், ஈரோடு ரயில்வே இன்ஸ்டிடியூட்டில் இருபிரிவினருக்கான டென்னிஸ்போட்டியும், ஈரோடு டாக்டர் ராம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனில் இருபிரிவினருக்கான மேஜைப்பந்து போட்டி, நீல்கிரிஸ் மனமகிழ் மன்றத்தில் இருபிரிவினருக்கான இறகுப்பந்து போட்டியும் நடக்கின்றன.

இப்போட்டிகளில் பங்குபெற ஜனவரி 1 ம்தேதி 1989 அன்றோ அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் வழங்கவேண்டும்.

மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் தேர்வு செய்யப்படுவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5வருடங்களாவது வசித்து வருவதற்கான சான்றினை தரவேண்டும். ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ்,  பள்ளி மாற்றுச்சான்றிதழ் இவைகளின் நகல் சான்றிதழ்  கொண்டுவரவேண்டும்.

மாவட்ட அளவில் தேர்வு பெறுபவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவேண்டும், மண்டல அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் கலந்துகொள்ளவேண்டும்.

 மாவட்ட அளவில் குழு மற்றும் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ ஆயிரம், ரூ750, ரூ500 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

 மண்டல அளவில் தேர்வு பெறுபவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா ரூ 10 ஆயிரம், ரூ75 ஆயிரம், ரூ50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும் விபரங்களை அறிய ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கனகராஜின் கைபேசி எண் 9940341490, அலுவலக எண் 0424-2223157 ஐ தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்