வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 24 அக்டோபர், 2013

அரசு வழங்கும் ரூ 50 ஆயிரம் பரிசுத்தொகையை பெற

 
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தமிழக அரசு பரிசுத்தொகையானரூ 50 த்தை பெற
விண்ணப்பங்கள் வரவேற்பு.

ஊராட்சிப்பகுதிகளில் வாழும் மகளிர் எழுத்தறிவு பெற தமிழக அரசு ரூ 50க்கான பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இதனைப்பெற சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் குழுக்களில் உள்ள கல்வியறிவற்ற மகளிருக்கு, கல்வி அறிவு பெற்ற உறுப்பினர்களைக்கொண்டு கற்றுத்தர எடுத்துவரும் கூட்டு முயற்சி அங்கீகரிக்கப்படுகிறது.

2013 -14 ம் ஆண்டிற்கான பரிசுத்தொகையை பெற 100 சதவிகிதம் எழுத்தறிவு  பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர்  தகுதியுடையவர்கள்.

எனவே 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற நடவடிக்கை மேற்கொள்ளும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் புதிதாக கற்பிக்கபட வேண்டிய உறுப்பினர்கள் விபரங்களுடன் , உரிய முன்மொழிவினை  நவம்பர் 15 -2013 ம் தேதிக்குள் ,திட்ட அலுவலர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்திட்டம், பூமாலை வணிக வளாகம், பெருந்துறை ரோடு, குமலன் குட்டை ஈரோடு மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்