வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழக அமைச்சர்களுக்கு அல்கய்தா மிரட்டல்.

                                         


மிழக அமைச்சர்களுக்கு அல்கய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள
தாக வந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களின்  வீட்டிற்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில்  தொழில்துறை அமைச்சராக தற்போது உள்ளவர் தங்கமணி, உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தற்போது இருப்பவர் பழனியப்பன், சம்பத் ஆகியோரை   போட்டுத்தள்ளிவிடுவோம் என அல்கய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து அந்த அமைப்பு நாமக்கல் அருகே உள்ள காடுவெட்டிப்பட்டி தனியார் பள்ளி ஒன்றின்  முதல்வருக்கு  கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக்கடிதத்தில்… ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை தமிழக அரசு பின்பற்றவேண்டும். இதனை பின்பற்றாவிட்டால் உங்கள் பள்ளியை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். இதன் மூலம் எங்களது பலம் என்ன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியவரும்.

 ஏற்காட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் தனது கட்சியின் சார்பில் யாரை நிறுத்தினாலும் ஏற்காடு மலைப்பகுதிகளில் குண்டு வைப்போம்.

அமைச்சர்கள் தங்கமணி, பழனியப்பன், சம்பத் மூன்றுபேரும்  தற்போது எங்களது பார்வையில் உள்ளனர்.

தமிழகத்துக்கு பன்னா இஸ்மாயிலின் கூட்டாளிகள் 100 பேர் வந்துள்ளோம்.

 நாங்கள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும், கல்லூரிகள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களை குண்டு வைத்து தகர்ப்போம்.

இன்றைக்கு 25 ம்தேதி எங்களது கோரிக்கைகள் நிறைவேறவேண்டும். இது நிறைவேறா விட்டால் குண்டுகள் முழங்கும்.
என அந்தக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அலர்ட்டான நாமக்கல் போலிசார் அனைத்து போலிஸ் ஸ்டேசன்களுக்கும் கொடுத்த தகவலை  அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் தங்கமணி வீடு அமைந்துள்ள குமாரபாளையத்தில் அவரது வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்ததாக அமைச்சர் பழனியப்பனின் சொந்த மாவட்டமான தர்மபுரியில் உள்ள பாப்பிரெட்டி அருகே உள்ள மோளையனூர் வீட்டிற்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் சம்பத்தின் வீட்டிற்கு தற்போதுவரை போலிஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.( அவர் மீது போலிசாருக்கு என்ன கடுப்போ?)

ஆமாம் இது குறித்து தமிழக ஊடகங்கள் மௌனம் சாதிப்பதற்கு என்ன காரணம்? உங்களுக்கு தெரியுமா?


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்