வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 24 அக்டோபர், 2013

பெண்கல்வி உதவித்தொகை அரசு ஆணை


  ஈரோடு மாவட்டத்தில்  7 மற்றும்8 ம்வகுப்புகளில் படித்துவரும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்களது கல்வியை
இடையில் நிறுத்தாமல்  தொடரவேண்டி தமிழக அரசு இந்த ஆண்டு முதல் ரூ ஆயிரத்து 500 வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி  7 மற்றும் 8 ம் வகுப்பு படித்துவரும் மாணவிகள்  பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகைக்கான கேட்புகளை உரிய படிவத்தில் சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் மனு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி     கல்வி  நிறுவன மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள் நேரிடையாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலகத்திற்கும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய பரிந்துரையுடன் சம்பந்தப்பட்ட உதவிக்கல்வி அலுவலர் மூலமாக ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கவேண்டும், என அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்