வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 21 நவம்பர், 2011

நவம்பர் 30ல் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல். வீடியோ பதிவு, போலிஸ்பாதுகாப்பு தர ,உயர்நீதி மன்றம் உத்தரவு

.

கொடுமுடி ஒன்றியக்குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை 
போலிஸ்பாதுகாப்புடனும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையிலும், நடத்தவேண்டும் அத்துடன் தேர்தலை வீடியோவில் பதிவும் செய்யவேண்டும் என
சென்னை ஹைகோர் ட் உத்தரவிட்டுள்ளது.

கொடுமுடி  யூனியனில் மொத்தம் 6  இடங்கள் கவுன்சிலர்களுக்கானவை. நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த  இடங்களுக்காக போட்டியிட்டவர்களில்  அ.தி.மு.க தரப்பில்  நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மீதம் இரண்டை சுயேட்சைகள் கைப்பற்றினர்.

இதில் ஒருவரை சேர்மன் பதவிக்கும், மற்ற ஒருவரை துணை சேர்மன் பதவிக்கும் தேர்வு செய்வதற்கான  தேர்தல் தேதி கடந்த  மாதம் 29 தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னர் அ.தி.மு.க தரப்பில் வெற்றிபெற்று 6வது வார்டு கவுன்சிலராக தேர்வு பெற்ற சுப்பிரமணியத்தை சேர்மன் பதவிக்கும், 1வது வார்டில் வெற்றி பெற்ற விஜயலட்சுமியை துணை சேர்மன் பதவிக்குமான  வேட்பாளர்கள் என அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நாள் நெருங்கியபோது அ.தி.மு.க தரப்பில் சேர்மன் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமிகொடுமுடி போலிசாரிடம் ஒரு புகார் தந்தார். அந்த புகாரில் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்  தனது மகன் சுப்பிரமணியத்தை கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து மற்ற அ.தி.மு.க கவுன்சிலர்களில்  இருவரான தமிழ்செல்வி, வீரண்ணன் ஆகியோரும் சுயேட்சை கவுன்சிலர்கள்  வாசுதேவன், வேலுசாமி இருவரும் என நான்கு பேரும்  மாநில தேர்தல் கமிஷனுக்கு ஒரு மனு அனுப்பினர்.

 அந்த மனுவில்..  கொடுமுடி யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன்  பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிடுவதென முடிவு செய்திருந்தோம். இதனை கருத்தில் கொண்டு எங்களது வெற்றிவாய்ப்பைத்தடுக்கும் நோக்கில்  அ.தி.மு.க தரப்பில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமி தனது மகன் சுப்பிரமணியத்தை சிலர் கடத்திவிட்டதாக போலிசில் புகார் செய்திருந்தார்.

இதனால் கொடுமுடி யூனியன் அலுவலகத்துக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக  சம்பந்தப்பட்டவர்கள் வந்தால் அவர்களை கைது செய்வோம் என போலிசார் கூறினர். இதனால்  தேர்தல் நாள் அன்று  வாக்களிக்க  நாங்கள்  வரவில்லை.

 எனவே கொடுமுடி யூனியன் சேர்மன், மற்றும் துணை சேர்மன் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நியாயமான முறையில் நடத்த மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை அடுத்து இந்த மாதம் நவம்பர் 30 ம்தேதி கொடுமுடி யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே சுயேட்சை கவுன்சிலர்களான வேலுசாமி, வாசுதேவன் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, வீரன் உள்ளிட்ட நான்குபேரும் சென்னை ஹைகோர்ட்டில்  ஒரு ரிட் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கொடுமுடி யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நியாயமாகவும், போலிஸ் பாதுகாப்புனுடன் நடத்தக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோரை கொண்ட பெஞ்ச், கொடுமுடி யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை போலிஸ்பாதுகாப்புடனும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மேற்பார்வையில்  வீடியோ பதிவுடன் நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினால் வருகிற 30 ம்தேதி நடைபெறுகிற  கொடுமுடி யூனியன் சேர்மனுக்கான தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்