வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 25 நவம்பர், 2011

கொடுமுடி ஒன்றியக்குழு தேர்தல் முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் முயற்சி.


  கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலில் நடந்துவரும் குழப்பங்களை தீர்க்க
அமைச்சர்  முயற்ச்சி.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியனுக்கான கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் 6 பேர். இதில் 4 பேர் அ.தி.மு.க வைச்சார்ந்தவர்கள். இருவர் சுயேட்சைகள்.

வெற்றிபெற்ற இந்த 6 பேரில் ஒருவரை சேர்மன், மற்றும் துணை சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்ற மாதம் 29 ம்தேதி நடைபெறுவதாக இருந்தது.

தேர்தல் நாளன்று சேர்மன் பதவிக்கு கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் என்பவர் காணாமல்போனார். இது குறித்து அவரது தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் ஒரு புகார் தந்தார்.
புகாரில் சிலர் சுப்பிரமணியத்தை கடத்தியதாக தெரிவித்திருந்தார். அதனால் தேர்தல் நின்றது. நின்ற தேர்தல் மீண்டும் இந்த மாதம் 30 தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட சுப்பிரமணியம் திரும்பிவிட்டதாக கட்சியினர் மத்தியிலும் போலிசார் மத்தியிலும் பேசப்பட்டது.
மேலும் கொடுமுடி நீதி மன்றத்தில் சுப்பிரமணியம் ஆஜர் ஆவதாகவும் பேசப்பட்டது. இன்று வரை அவர் ஆஜராகவில்லை.
அ.தி.மு.க அனுதாபிகளான சுயேட்சை கவுன்சிலருக்கும் சுப்பிரமணியத்தின் ஆதரவாளரான ஒரு முக்கிய அரசியல் வாதிக்கும் நடந்த பனிப்போரே இந்த  இழுபறிக்கான காரணம் எனவும்,
கட்சிக்குள்  நடக்கும் முக்கோண யுத்தமே சேர்மன் தேர்தலில் திருவிளையாடல்கள்! நடப்பதற்கு காரணம் எனவும் மக்களால் தற்போது பேசப்பட்டுவருகிறது.

இந்த நிலையில்  வெற்றிபெற்ற நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்களில் இருவர் சேர்மன் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்து சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

அவர்களுக்கு சுயேட்சை கவுன்சிலர்களும் தங்களது ஆதரவை தெரிவிப்பதால் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை நீடிக்கிறது என்ற கருத்தும்  மறுபுறம் பரவிவருகிறது.

இதற்கிடையே  மாவட்ட அரசியல் புள்ளி ஒருவர் இந்த விளையாட்டில் முக்கிய பங்கெடுத்துள்ளதால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரமுடியாமல் நீ…டிக்கிறது.

இந்த பிரச்சனையை மையப்படுத்தி  கொடுமுடி ஒன்றியத்தில் கட்சியில் பலம் மிக்க பதவியில் உள்ள ஒருவரின் கட்சி பதவியை பறிப்பதற்கான  ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்துவருகிறது என்றுகட்சிவட்டாரத்தில் ஓபன் சீக்ரெட்டாக பேசப்படுகிறது.

ஒன்றிய பதவியில் உள்ள நபரை ஓரம் கட்டிய பின்னர் சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தி கொள்ளும் நோக்கத்துடன்  புகார்கள் அடங்கிய மனுக்களுடன் ஒரு குழு நேற்று இரவு சென்னை புறப்பட்டு சென்றுள்ளது.

அந்தக்குழு சென்னையில் உள்ள கட்சித்தலைமையை நேரில் சந்தித்து பதவிபறிப்புக்கான வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தவுடன் சிரமம் இல்லாமல் சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்  இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் நேற்று ஈரோட்டில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் பிரச்சனையை பேசித்தீர்க்க மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி, முன்னாள் அமைச்சரும் மாவட்ட அவைத்தலைவருமான பி.சி ராமசாமி, மாவட்ட செயலாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான கே.வி ராமலிங்கம், கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி,மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.,பாலகிருஷ்ணன், அமைச்சர் கே.ஏ.செங்கேட்டையன் ஆகியோர் சந்தித்தனர்.

சுயேட்சைகளின் ஆதரவை பெற்ற கொடுமுடி  யூனியன் அ.தி.மு.கவுன்சிலர்களில் ஒருவரை போனில் அழைத்துப்பேசினர். அமைச்சரை நேரில் சந்திக்க வருவதாக கூறிய அந்த கவுன்சிலர் வருவதற்கு நேரமானது.

வெள்ளகோயில் நகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்துக்கு அமைச்சர்கள் செல்லவேண்டி இருந்ததால்  புறப்பட்டு சென்றனர் இதனால்  அமைச்சர்  கவுன்சிலர் சந்திப்பு  நின்று போனது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்