வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 25 நவம்பர், 2011

கடத்தப்பட்ட கவுன்சிலர் சரண்டர்?! காத்துக்கிடக்கும் கட்சி பிரமுகர்கள்.


 கொடுமுடி யூனியனுக்கான  சேர்மன் வேட்பாளராக அ.தி.மு.க வால் அறிவிக்கப்பட்டு தேர்தல் நாளன்று கடத்தப்பட்டவர்
கொடுமுடி கோர்ட்டில் ஆஜராவதாக செய்தி கசிந்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கொடுமுடி யூனியனுக்கு மொத்தம் ஆறு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மீதம் இரண்டுபேர் சுயேட்சைகள்.

இவர்களில் இருவரை சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்தேதி கடந்த மாதம் 29 ம்தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ சேர்மன் வேட்பாளராக 6 வது வார்டில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கவுன்சிலர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் நாளன்று  சிலரால் இவர் கடத்தப்பட்டதாக சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமி  கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்தார்.
இந்த புகாரினால்  தேர்தலில் வாக்களிக்க மற்ற கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தல் மீண்டும் இந்த மாதம்  நவம்பர் 30 ம்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்<தலுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இதற்கிடையே நேற்று காலை முதல் அ.தி.மு.க வட்டாரத்திலும், போலிசார் மத்தியிலும் ஒரு வித பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து விசாரித்தபோது கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம்  வந்துவிட்டதாகவும் அவர் போலிசாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடைய உள்ளதாக பதில் வந்தது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்