வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 25 நவம்பர், 2011

நடவடிக்கை எடுக்கவேண்டும்....

ஈரோடு மாவட்டம்
கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலில் கட்சி அறிவித்த சேர்மன் வேட்பாளருக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க வினர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என
அக்கட்சியின்  நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றனர்.
கொடுமுடி யூனியனில் மொத்தம் 6 கவுன்சிலர் இடங்கள் உள்ளன. இவற்றில்  போட்டியிட்ட ஆளுங்கட்சியான அ.தி.மு.க நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டு இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றனர்.

இந்த யூனியனுக்கான சேர்மன் பதவிக்கான வேட்பாளராக அ.தி.மு.க கவுன்சிலர்களில் ஒருவரான சுப்பிரமணியம் என்பவரை கட்சி அறிவித்தது.
சேர்மனை தேர்ந்தெடுக்கும்  தேர்தல் சென்ற மாதம் 29 ம்தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நாளான்று சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியத்தை சிலர் கடத்தி சென்று விட்டதாக சுப்பிரமணியத்தின் தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து தேர்தலில் வாக்களிக்க கவுன்சிலர்கள் வராததால் மறு அறிவிப்பின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்  1 வது வார்டில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கவுன்சிலர் விஜயலட்சுமியை தவிர மற்ற கவுன்சிலர்கள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினர்.
அந்த மனுவில் போலிசாரின் எச்சரிக்கையால் தேர்தல் நாளான்று தாங்கள்  வாக்களிக்க வரவில்லை என்றும்,  மறுபடியும் சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நியாயமான முறையில் நடத்த <நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதனை அடுத்து இந்த மாதம் 30 ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதற்கிடையே இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் ரிட் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் கொடுமுடி யூனியன் சேர்மன், மற்றும் துணை சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையிலும் போலிசாரின் பாதுகாப்பிலும்  நடத்தப்படவேண்டும் தவிர தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவும் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.

 தேர்தலுக்கான வேலைகள் தற்போது நடந்து வரும்  நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கொடுமுடி யூனியனில் உள்ள கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், ஊஞ்சலூர், வெள்ளோட்டாம்பரப்பு, கிளாம்பாடி, பாசூர், சிவகிரி, கொல்லங்கோயில், ஆகிய 9 பேரூராட்சிகள், ஆவுடையார்பாறை, எழுநூற்றிமங்களம், அய்யம்பாளையம், வள்ளிபுரம், அஞ்சூர், கொங்குடையாம்பாளையம், கொளாநல்லி,இச்சிப்பாளையம், கொளத்துப்பாளையம்,கொந்தளம் ஆகிய  10 ஊராட்சிகளில்  உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொருப்பாளர்களை சந்தித்து  ஒரு மனுவில் கையெழுத்துக்களை பெற்று வருகின்றனர்.

கட்சி  அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன்  இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த மனுவை கட்சிதலைமை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் நிலையில் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் நிலை என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 அத்துடன் ஒரு புறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபுறம்  இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுவது கொடுமுடி யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுமா? இல்லை.. மறுபடியும் தள்ளிப்போகுமா?! என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்