வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 30 செப்டம்பர், 2013

டெங்குவை எதிர்கொள்ள ஈரோடு மாவட்டம் தயார்நிலை.




 ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.


  கூட்டத்தில் ஆட்சியர் சண்முகம் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா, போன்ற நோய்கள் வராமல் இருக்க பயன்படாத டயர், காலி பாட்டில்கள், உரல், உடைந்த பானை, கொட்டாங்குச்சி, போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அவற்றை அப்புறபடுத்த வேண்டும். இது தொடர்பான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குனர்கள், நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட வேண்டும். மாவட்ட தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியாக சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மேலும் டெங்கு காய்ச்சல் நோய்க்கு போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திடவேண்டும். மாவட்ட சித்தமருத்துன அலுவலர் சித்த மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்புக்குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்து விநியோகிக்க வேண்டும். மேல்நிலைத்தொட்டிகள் அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒரு முறை கழுவி சுத்தம் செய்து கொசு புகாவண்ணம் மூடி வைக்கவேண்டும்.

கொசுப்புழு ஒழிப்பு மருந்து அபேட் வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதற்கு உரிய நடவடிக்கையும், கொசுப்புகை மருந்து அடிக்க உரிய நடவடிக்கையும் மற்றும் சாக்கடை நீர் தங்கு தடையின்றி சீராக செல்லவும்  சம்பந்தப்பட்ட தமிழ்நாட குடிநீர் வடிகால் வாரியத்தினர், பேரூராட்சிகள்  உதவி இயக்குநர், மாநகராட்சி ஆணையாளர், ஊராட்சிகள் உதவி இயக்குநர். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் நோய், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்திட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும், முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 வீட்டுவசதி வாரியங்கள் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் அமைந்துள்ள சாக்கடைகளில் நீர் தேங்காதவாறும், மேல்நிலை, கீழ் நிலைத்தொட்டிகளை கொசு புகாதாவாறு மூடி வைக்கவேண்டும். மேலும் நச்சுத்தொட்டிகள் நன்றாக மூடி வைத்து காற்றுப்போக்கிகளில் வலைகளை கொண்டு கட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அனைத்து சாலைகளில் இருபுறமும் உள்ள தேவையில்லா செடிகள் மற்றும் புற்களை சாலைப்பணியாளர்கள் மூலம் அப்புற படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 அனைத்து துறையினரும் தயார் நிலை, தற்காப்பு
முன் அனுபவங்களை பின்பற்றி மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

கூட்டத்தில் துணை இயக்கநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் பாலுசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செல்வம் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்