வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்டஅளவிலான போட்டிகள்



 ஈரோட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட விளையாட்டுப்பிரிவு ஆகியவற்றின் சார்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

 இந்தப்போட்டிகள் அடுத்த அக்டோபர் மாதம் 5 ம்தேதி காலை 8 மணிக்கு ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
 இதில்  கை கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காதுகேளாதோர், ஆகியோர் கலந்துகொள்ளலாம். போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை இவற்றில் ஏதேனும் ஒன்றினைக்கொண்டு வருதல் வேண்டும்.

  கை கால் ஊனமுற்றோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், பார்வையற்றோர் பிரிவில் 50,100 மீட்டர் ஓட்டம்,  ஆகிய போட்டிகள் நடக்கின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில்50 மற்றும்100 மீட்டர் ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.

காது கேளாதவர்களுக்கான போட்டிகளில் 100 மீட்டர்.200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
இந்த விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளவேண்டும். மேலும் இது குறித்து அறிய 0424-2223157,9940341490 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்