வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 2 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ170.00 லட்சம் .ஆட்சியர் அறிவிப்பு

.                                              
                                                 


          காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு காதிகிராப்ட் விற்பனை அங்காடியில் கதர் கிராமத்தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை இணைந்து நடத்திய காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க
விழா நடந்தது.

விழாவில் மகாத்மாகாந்தியின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 10 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 136 பெண் நூற்பாலர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ 29.22 லட்சம் மதிப்பில் கதர் மற்றும் பாலியெஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 மேலும் 3 கதர் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு நேபாளி தறி அலகும் செயல்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி நிலையங்களில் 160 கதர் மற்றும் பாலியெஸ்டர் துணி உற்பத்தி தறிகள் செயல்பட்டு வருகிறது.

65 நெசவாளர்களுக்கு நேரடியாகவும்,175 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ62.10 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலியெஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 காதி கிராப்ட் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூ112.50 லட்சத்திற்கு கதர், பட்டு, உல்லன், மற்றும் பாலியெஸ்டர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கதர்வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலலை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, தேன் வகைகள் ஆகியவைகள் கடந்த ஆண்டு ரூ45.74 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ 170.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி, மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கதர், பட்டு மற்றும் பாலிகாட்டன் ரகங்களுக்கு30 சதவிகித சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்