வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 2 அக்டோபர், 2013

மூட உத்தரவு.

ஈரோடு மாவட்டத்தில்
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு மற்றும் தனியாரால் அமைக்கப்பட்டுள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  ஈரோடு மாவட்டத்தில் பயன்படாத அனைத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் சரியாக பராமரிப்பின்றி உள்ளதால் அவற்றில் குழந்தைகள் தவறி விழும் வாய்ப்புள்ளது.

இதனால் ஏற்படும் உயிர் சேதங்களை தவிர்க்க ஊராட்சி குடியிருப்பில் அரசு மற்றும் தனியாரால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் உரிய பராமரிப்பின்றி இருப்பதும், அவற்றில் பாதுகாப்பான முறையில் மழைநீர் சேகரிக்க கட்டமைப்பு வாய்ப்பு இருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத்தெரியவரின் பொதுமக்கள் மற்றும் சமுதாய தொண்டு நிறுவனங்கள் உடனடியாக அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்