வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 2 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்

. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்
உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், என எட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இவற்றிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சத்து91 ஆயிரத்து 394 வாக்காளர்களும், மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 399 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 101வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 225 வாக்காளர்களும், பவானி தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 709 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 880 வாக்காளர்களும், கோபி தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 101 வாக்காளர்களும், பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 580 வாக்காளர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் <உள்ளமொத்த வாக்காளர்களில் ஆண்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 868 ம் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை8 லட்சத்து 27 ஆயிரத்து98 ம் திருநங்கைகள் 44 ம் படைவீரர்களின்  எண்ணிக்கை 388 ம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல்  ஈரோடு, கோபி வருவாய் கோட்ட அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் அக்டோபர்1 முதல் 31 ம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, பெயர் திருத்தம் செய்யபடிவம் 8 முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகிய படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் அலுவலர்களிடம் வழங்கலாம்.

1--1--2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருந்தால் அவர் தம் பெயரை வாக்காளர் பட்டியலில் படிவம் 6 ல் விண்ணப்பித்து வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன்  அக்2 முதல் 5 வரை நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் பெயர் வாசித்து காண்பிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முனைப்பு இயக்கம் அக்டோபர் 6 ம்தேதி 20 ம்தேதி, 27 ம்தேதி ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6 ம்தேதி வெளியிடப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவர்கள் இணையதள மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் 50 இணைய தள மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்களாக உள்ளன. வீட்டில் இருந்த படியும் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது வரை 4 ஆயிரத்து 643 நபர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 ஆயிரத்து 808 நபர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், நேர்முக .உதவியாளர் பொது டாக்டர் சுகுமார், வட்டாட்சியர லட்சமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செல்வம், ஈரோடு துணை மேயர் பழனிச்சாமி, வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்