வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிரபாகரன் , ராஜபக்சே இருவருக்கும் பங்கு உள்ளது.

  மக்களுக்காக வாழ்கிற தலைவர்களை கொண்டிருக்கும்  ஓரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்று
கொடுமுடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழாரம் சூட்டினார்.

கொடுமுடியில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி ஊழியர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கொடுமுடி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால் தலைமை வகித்தார்.


மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆர்.எம். பழனிசாமி சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:  இலங்கை பிரச்சனை என்பது ராஜீவ் காந்திக்கு பின்  ராஜீவ்காந்திக்கு முன்  என பார்க்கவேண்டும். தமிழ்மக்களை அழித்து ஓழித்ததில் பிரபாகரன் , ராஜபக்சே இருவருக்கும் பங்கு உள்ளது.

 இலங்கை தமிழருக்கான வாக்குரிமை, வாழ்வுரிமையை வாங்கிக்கொடுத்தவர் மகாத்மாகாந்தி, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர் பிரபாகரன், இலங்கை பிரச்சனை குறித்து சீமானுக்கு எதுவும் தெரியாது.

ராஜீவ்காந்தியை சிங்களவன் அடிக்கும்போது இவர்கள் எங்கு போனார்கள்.

காங்கிரஸ்காரன் தமிழனுக்கு என்றைக்குமே எதிரியல்ல.

ஜெயலலிதாவைவிட கருணாநிதியைவிட காங்கிரஸ்காரன் எவ்வளவோ மேல். மக்களுக்காக வாழ்கிற தலைவர்களை கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான் . இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விபரம் வருமாறு: கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி பதவியை காப்பாற்ற இயற்றிய அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ராகுல்காந்தியை பாராட்டுகிறோம்.

 நூறுநாள் வேலைவாய்ப்பு சட்டம், தகவல் உரிமை சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்த சோனியாகாந்தியை பாராட்டுகிறோம்.

விவசாய பெருமக்கள் பயன்பெற பால்விலையை ரூ30ம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ஐந்தாயிரம் என உயர்த்த அரசைக்கேட்டுக்கொள்கிறோம்.

கொடுமுடி வட்டார காங்கிரஸ் கட்சியில் குறைந்தது பத்தாயிரம் உறுப்பினர்களையாவது சேர்ப்பது. கொடுமுடியை தனித்தாலுக்காவாக அறிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்