வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 3 அக்டோபர், 2013

ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நாள் அக்டோபர் 3.




வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் திராவிடக்கட்சிகளுடன் ம.தி.மு.க கூட்டணி வைத்துக்கொள்ளாது.

 தவிர காங்கிரஸ் கட்சிக்கு கடைசி நேரத்தில் ஆதரவு தரும் எந்தக்கட்சியுடனும் எப்போதும்  உறவு வைத்துக்கொள்ளாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ பேசினார்.

ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சி ஒன்றியத்தில்  உள்ள  சோலார், சாவடிப்பாளையம், காங்கயம்பாளையம், கணபதிபாளையம், பழமங்களம், மின்னப்பாளையம்  காகம், பாரப்பாளையம், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, ஊத்துக்குளி உள்ளிட்ட இருபத்து மூன்று இடங்களில் வை.கோ மறுமலர்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

வருகிற நாடாளுமன்றத்தேர்தலில்  ஈரோடு தொகுதியில் நிச்சயம் ம.தி.மு.கபோட்டியிடும்,  வேட்பாளராக தற்போதைய எம்.பி கணேசமூர்த்தி நிறுத்தப்படுவார்என்று கூறிய வை.கோ. கணேசமூர்த்திக்கு ஆதரவு கேட்டு இந்தப்பயணத்தை துவங்கி இருப்பதாக கூறினார்.

மேலும் அவர் பேசியாவது வருகிற பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை  காங்கிரஸ்கட்சி  கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதனால் தான் உங்களை முன்கூட்டியே சந்திக்க வந்திருக்கிறேன். ஏனென்றால் அப்போது வருவதற்கு என நேரம் இருக்காது.

எனவே முன்கூட்டியே உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.  அமாராவதி, பவானி , முல்லை பெரியார்  விவசாயிகள் பாலை வனத்தை பார்க்கிற வாய்ப்பை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது. அதனால் தான் வருகிற தேர்தலில் தமிழினத்தை அழிக்க உதவிய காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கவேண்டும்.
மேலும் அக்டோபர் 3 ம்தேதி ம.தி.மு.க வுக்கு முக்கியமான நாள். ம.தி.மு.க உதித்த நாள்.

இந்த நாளில் தான் ஒரு பொய்யான காரணத்தைக்கூறி விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல நான் முயற்சிப்பதாக கருணாநிதி  தீபாவளி நாளன்று என்னை கட்சியை விட்டு வெளியேற்றினார்.

  ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நாள் இந்த அக்டோபர் 3.

இன்று தான் தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்து வந்து டெல்லி அசோகா ஹோட்டலில் பூட்டி வைத்து இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை திணித்த நாள்.

திலீபன் மறைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேரை பலாலி சிறையில் பூட்டி வைத்தநாள்.

தீட்சித்தின் துர்போதனையால் ராஜிவ்காந்தி விடுதலைப்புலிகளின் தளபதிகளை  சிங்கள ராணுவத்திடம் ஒப்படைக்க முயன்றபோது அவர்கள் பனிரண்டுபேரும் சயனைட் குப்பி கடித்து இறந்ததற்கு காரணமான நாள்.

எனவே அக்டோபர் 3 ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நாள்.


மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடியதற்கு பேர் புரட்சி அந்தப்புரட்சியை, மாற்றத்தை எங்களால்  தர முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.

கூட்டத்தில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்