வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 8 பிப்ரவரி, 2014

ஊடக நிறுவன பணியாளருக்கான ஊதியம் கமிஷன் பரிந்துரைத்தபடி வழங்கவேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி.


ஊடக நிறுவனங்களில் பணியாற்றிவருவோருக்கு  ஊதிய கமிஷன் பரிந்துரைத்துள்ளபடி ஊதியம் வழங்கவேண்டும்  என  இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


சென்ற 2011 ம் ஆண்டு நவம்பர் 11 ல் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை ஊதிய கமிஷன் பரிந்துரைத்துள்ளபடி வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனை ஏற்காத ஊடக நிறுவனங்களில் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இந்த மனுவின் மீதான விசாரணை நடந்துவந்தது.

இதன் முடிவில் நேற்று பிப்ரவரி 7 ம்தேதி 2014 ல் மனுவின் மீதான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி ஊதிய கமிஷன் பரிந்துரைத்துள்ளபடியான ஊதியத்தை ஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்களுக்கு வழங்கவேண்டும் தீர்ப்பை தந்தது.
இந்த ஊதியத்தை கடந்த 2011 ம்தேதி நவம்பருக்கு பிறகிருந்து வழங்கவேண்டும். நிலுவைத்தொகையை மூன்று தவணைக்குள் வழங்கிட வேண்டும் என தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்