வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 6 பிப்ரவரி, 2014

கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கு அரசு கிடுக்கிபிடி...


பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் கேபிள் டி.விக்கான சந்தாதொகைக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள
ரசீது புத்தகத்தைக்கொண்டுதான் மாதாந்திர சந்தாதொகை ரூ 70 ஐ வசூல் செய்யவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு செய்திதுறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

தமிழக முதல்வர் கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ம்தேதி சட்டசபையில் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மாதம் ரூ70 என்ற கட்டணத்தில் தரமான கேபிள் டி.வி சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும் இதில் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ20ஐ தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு செலுத்துவார்கள் எனவும் அறிவித்தார்.

அரசு நிர்ணயம் செய்த மாத சந்தாத்தொகையான ரூ70ஐ மட்டுமே கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை உறுதிசெய்யும் பொருட்டு சந்தா தொகை வசூல் செய்வதற்கான ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் அச்சிடபட்டு வழங்கப்பட்டுள்ளன.
எனவே பிப்ரவரி 2014 முதல் கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி அச்சிட்டு வழங்கியுள்ள ரசீது புத்தகத்தைக்கொண்டுதான் இனி ஒவ்வொரு சந்தாதார்களிடமிருந்து மாதாந்திர சந்தாதொகை ரூ70 ஐ வசூல் செய்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள மேற்படி ரசீது புத்தகத்தைத்தவிர வேறு எந்தவிதமான ரசீது புத்தகத்தையும் இனி பயன்படுத்துதல் கூடாது.

இந்நடைமுறையை பின்பற்றாத உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மீது விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் கேபிள் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் மாத சந்தா தொகையான ரூ 70ஐ மட்டுமே கேபிள் ஆபரேட்டர்களிடம் செலுத்துமாறும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வழங்கியுள்ள ரசீதை கேட்டுப்பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள சந்தா தொகையை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்தாலோ அல்லது வசூல் செய்த சந்தா தொகைக்கு  நிறுவனத்தால் அளிக்கப்படும் ரசீது வழங்க மறுத்தாலோ அந்தந்த மாவட்ட கேபிள் டி.வி துணை மேலாளருக்கு புகார் செய்யலாம் அல்லது அரசு கேபிள் டி.வி மின்னஞ்சல் முகவரியான  arasucabletvcorp@gmail.com (அரசு கேபிள்டி.வி கார்ப் அட் ஜி மெயில் டாட்காம் )க்கு இ மெயில் அனுப்பலாம். அல்லது 044-28221233 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் அல்லது044-28253021 என்ற எண்ணிற்கு பேக்ஸ் அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்