வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நெல் திருடிய அரிசி ஆலை அதிபருக்கு அபராதம். கண்டு கொள்ளப்படாத காவல்துறை.


 ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக

 செயல்பட்டுவருகிறது ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கமிட்டி. இந்தகமிட்டியில் சிவகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனைக்கு விடுவது வழக்கம்.
            
             நெல்,எள், மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு பெயர்பெற்ற இந்த கமிட்டியில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம். தற்போது இந்த கமிட்டியில் நெல்கொள்முதல் நடைபெற்று வருகிறது.
           
          தினந்தோறும் ரூ 5 லட்சம் மதிப்பிலான நெல்லை கொள்முதல் செய்துவரும் இந்தக்கமிட்டியில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகளும் தங்களது நெல்லை கொண்டு வந்து விற்பதும், வாங்குவதும் வழக்கமாக உள்ளது.

              இந்த நிலையில் நேற்று வெள்ளோட்டாம்பரப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து அதனை திறந்த வெளியில் குவித்து வைத்திருந்தார்.
              அந்த நெல்லை சின்னியம்பாளையத்தைச்சேர்ந்த  அரிசி ஆலை நடத்திவரும் வியாபாரி ஒருவர் திருடி உள்ளார்.

      இதனைக்கண்ணுற்ற நெல்லின் உரிமையாளர் அவரை பிடித்தார். இந்த செயலைக்கண்ட மற்ற விவசாயிகள் அந்த அரிசி ஆலை அதிபரை நய்ய புடைத்து விசாரணை நடத்தினர்.
         
          விசாரணையில் நெல்லை திருடியதை ஒப்புக்கொண்ட அந்த அரிசி ஆலை அதிபர் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு குற்றத்தொகையாக ரூ 30 ஆயிரத்தை தந்தார்.
       
              இதனை அடுத்து விவசாயிகள் களைந்து சென்றனர்.
         
          குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைக்காமல்  கட்டப்பஞ்சாயத்துக்கணக்காக கடவுள் பெயரைக்கூறி குற்றவாளிகளிடமிருந்து தொகையை பெற்றுக்கொண்ட செயல் ,கடவுளுக்கு குற்றத்தொகை செலுத்திவிட்டு திருட்டைத்தொடரலாம் என திருட்டுக்கு அங்கீகாரம் அளித்தது போல் இருக்கிறது என  குமுறிக்கொண்டு விவசாயிகள் சென்றனர்.
        
       ,நடந்த சம்பவம் குறித்து சம்பவத்தில் ஈடுபட்ட அரிசி ஆலை அதிபரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

     நடந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது. தவறு நடந்துவிட்டது என தெரிந்தபோது அதற்கு பரிகாரம் செய்துவிடுகிறோம் என கூறினேன். அதனை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டும் என்றே எனது எதிரிகள் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்திவிட்டனர் என்றார்.

நெல் திருட்டு குறித்து பார்வையாளர்கள் சிலர் கூறும்போது
          
        நடந்த இந்த செயல் வெளியுலகுக்கு தெரியாமல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த பிரமுகர்களால்  கமிட்டியின் பெயர் கெட்டுவிடும் என்றக்காரணம் கூறி மறைக்கப்பட்டது .
           
        அலுவலர்களின் ஆசி கிடைக்காமல் இந்த சம்பவம் நடந்திருக்கவாய்ப்பே இல்லை. பல வருடங்களாகவே இந்த சம்பவம் நடந்திருக்கவேண்டும்.

              ஏனென்றால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்து கமிட்டியில் இருப்பு வைக்கப்படும் தங்களது விளைபொருட்கள் குறைந்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து அலுவலர்களிடம் சொல்லி வந்தனர். அதனை அவர்கள் கண்டுகொள்ளாமலே இருந்து வந்தனர்.
      
             அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சம்பவங்கள் தொடரவாய்ப்பே இல்லை. பத்துஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  இந்த கமிட்டியில் மின்விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருண்டே கிடக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களை கொண்டுவந்து திருடிய பொருட்களை எடுத்துசெல்ல இது வாய்ப்பிருக்கிறது.
        
            தவிர நெல்லை திருடியவர் தனது கோணிபைகளில் நெல்லை திருடாமல் பட்டப்பகலில்  கமிட்டிக்கு சொந்தமான கோணிப்பைகளைக்கொண்டு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை பகிரங்கமாகவே அள்ளியுள்ளார்.
  
                 இது அலுவலர்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. பல ஆண்டுகளாகவே இந்த சம்பவம் நடந்துவந்துள்ளது. தவிர இந்த கமிட்டியில் பணியில் உள்ள ஒரு பணியாளர் அடிக்கடி அந்த அரிசி ஆலை அதிபரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்றனர்.
             

அங்கு நடந்த உரையாடல் சிலவற்றை  ஒலிப்பதிவு வடிவில் தந்துள்ளோம். அவற்றை கேட்க இங்கு சொடுக்கவும
https://soundcloud.com/sivagirimanickam/mpeg2audio

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்