வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 26 செப்டம்பர், 2011

செல்போன் பயன்படுத்த தடை, பெயருக்கு பதில் சின்னம் மட்டுமே தேர்தல் ஆணையம் அதிரடி

                                                                  
          
                                   .தமிழக உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம்



அறிவித்துள்ள நிலையில்

தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்த நிலையில் தேர்தலின்போது வாக்குசாவடியில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின்

 செயலாளர்சேவியர் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடைபெறும் போதும்,

 வாக்கு எண்ணும்போதும் வாக்குசாவடிகளுக்குள்ளும், வாக்கு எண்ணும் மையங்களிலும்

 வேட்பாளர்கள், மற்றும் அவருடைய முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர் உள்ளிட்ட

எவரும் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.

   இதேபோன்றே வாக்காளர்கள் எவரும் வாக்குசாவடிகளுக்குள் செல்போன்களை

கொண்டுவர அனுமதிக்கூடாது. வாக்குசாவடியின் உயர் அலுவலர் மட்டுமே வாக்குபதிவு குறித்த

தகவலை வழங்குவதற்காக செல்போனை பயன்படுத்தலாம்.

   தேர்தல் நாளான்று வழங்கப்படும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பதிலாக அவர்களது

சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்