வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 26 செப்டம்பர், 2011

மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும். ராஜா வழக்குரைஞர் வாதம்.

                                                              
மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும் என ஸ்பெக்ட்ரம்  வழக்கில் கைதாகியுள்ள


 முன்னாள்தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் வழக்குரைஞர் வாதிட்டார்.

   2ஜி அலைக்கற்றை விவாகரத்தில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா, மற்றும் எம்.பி

 கனிமொழி  ஆகியோர் மீது

வழக்கு பதியப்பட்டு சிறையில் <உள்ளனர்.

   இவர்கள் மீதான வழக்கு விவாதம்  நடந்தது. அதில் ராஜாவின் வழக்குரைஞர் சுசில்குமார் வாதாடியதாவது:

ஸ்பெக்டரம் விவகாரம் குறித்த தகவல்கள் மற்றும் அதன் உண்மை நிலை ஆகியவை அப்போது
நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கு தெரியும்.

 அலைவரிசை ஒதுக்கீட்டில் ராஜாவுக்கும், அப்போதைய நிதி அமைச்சருக்கும்

 கருத்துவேற்றுமைகள் எதுவும் எழவில்லை. கடந்த 2003 ம்ஆண்டு இருந்த அமைச்சரவை

 எடுத்த நிலைப்பாட்டைத்தான் அதனை அடுத்து வந்த அமைச்சரவையும் பின்பற்றியுள்ளது.

இந்த வழக்கில் அமைச்சரவையில் உள்ள அனைவரும் விசாரணையை சந்தித்திருக்கவேண்டும்.

ஆனால் எனது கட்சிக்காரர் மட்டும் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது ஏன்?

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 311 ன் படி மத்திய அமைச்சர் சிதம்பரத்தை இந்த வழக்கில்

ஒரு சாட்சியாக அழைத்து விசாரிக்கவேண்டும்.

   பிரதமர் முன்னிலையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அறிவுரை வழங்கப்பட்டதா?

 இல்லையா? என்பதை அவரே கோர்ட்டில் தெரிவிப்பார்.

இந்த விசாரணைக்கு பின்னர் பிரதமரை நீதி மன்றத்துக்கு அழைக்கலாமா? வேண்டாமா?

என்பதை நீதி மன்றம் முடிவு செய்யலாம்.


      இந்த விசாரணையின்போது ராஜா, உள்ளிட்ட இருவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை பதிவு
செய்ய நீதி மன்ற அனுமதிகோரி சி.பி.ஐ ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது.


 அந்த மனுவில் “ பொதுவாழ்வில் அரசு ஊழியராக இருந்தவாறே கிரிமினல் குற்றம்
 புரிந்திருப்பது நம்பிக்கை மோசடியாகும். பிரிவு120 மற்றும் 409 ன் கீழ் இதனை செய்துள்ளவர்களுக்கு
 ஆயுள் தண்டணை வழங்கவேண்டும்”. என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்