வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 5 மே, 2012

யார் காரணம்?


 சிவகிரி வேலாயுசுவாமி கோயில்  41 வதுசித்திரைத்தேர்திருவிழா
கடந்த

மாதம் 29 ம்தேதிகிராம சாந்தியுடன் துவங்கியது. விழாவில் இன்று 6ம் தேதி

காலை 6 மணிக்கு  சுவாமி திருக்கல்யாணமும், 10 மணிக்கு சுவாமி ரதத்துக்கு

எழுந்தரும் நிகழ்ச்சியும் நடந்தன.

இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி,

மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்,

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தனபாலன் சிவகிரி கிராம கூரை குல  தலைவர்கள் ஆறுமுகம்,

குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு  நிகழ்ச்சி யை துவக்கி வைத்தனர்.


 இதனை அடுத்து பக்தர்கள் சரணகோஷம் முழங்க தேரினை
இழுத்தனர்.

விழாவில் நாளை  மாலை 5 மணிக்கு தேர்நிலை சேர்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 8 ம்தேதி

இரவு 7 மணிக்கு பரிவேட்டை யும், 9 ம்தேதி மாலை 4 மணிக்கு நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும், 10 ம்தேதி இரவு 9 மணிக்கு விடையாற்றி உற்சவமும்
நடக்கின்றன.

பின்குறிப்பு:
அந்தக்காலத்தில் கோயில் விழாக்கள் பல்வேறு தொழில்புரிவோருக்கும்  வேலை வாய்ப்பை தருவதாகவும்,

 மக்கள் பல்வேறு சாதிகளாக பிரிக்கப்பட்டிருந்தபோதிலும் இறைவன்
முன்னிலையில் சமம் எனும் கருத்தை விளக்கி ஒற்றுமையை சொல்வதாகவும் விளங்கின. இதனால் மக்கள் பகையை மறந்து ஒன்றிணைவதற்கும், பல்வேறு சுப நிகழ்வுகள்
நடப்பதற்கும் ஏதுவாக இருந்தன.

தற்போது கோயில் விழாக்கள் பெரும்பாலும் எந்திர கதியில் உணர்வுபூர்வமற்றதாகவும்

மனித நேயத்தை மறக்க செய்வதாகவும் மாறிவருகின்றன. சிவகிரியில்

நடந்த தேர்திருவிழா ஒரு காலத்தில் ஊர் ஒற்றுமையை பறைசாற்றுவதாக விளங்கியது.


ஆனால் தற்போது அந்த ஊரில் நடக்கும் தேர்திருவிழாவில் தேரினை இழுப்பதற்குகூட மனித சக்தி ஒன்றிணையாமல் எந்திரங்களின் சக்தியை நம்பி தேரினை இழுக்கும்படி உள்ளது.

சாதிகளும் மதங்களும் மனிதர்களின் மனங்களில் தவறான வகையில் பரவி விஷ

 வித்துக்களை விளைவித்ததால் இன்று இறைவனுக்கு என நடத்தப்படும் விழா கூட மனிதர்களிடையே

 சந்தோஷத்தை ஏற்படுத்தாமல் சங்கடங்களை தருபவையாக மாறிவிட்டன. நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வை கழித்துவரும் நிலையல் நாளைய
உலகுக்கு நம்மால் என்ன நன்மையை தந்துவிட முடியும்? நாளைய தலைமுறைக்கு எதை நாம் தந்துவிட்டு செல்லப்போகிறோம் சங்கடங்களையா?
சந்தோஷங்களையா? எந்திர மயமான  இந்த உலகில்

இதற்கு யார் காரணம்? எண்ணிப்பார்ப்போமா?

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்