வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 8 மே, 2012

விலைவாசிகள்

 கைத்தறி நெசவாளர் 
சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மாநில அரசு

 உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்புக்கு நன்றி கூறி

 சிவகிரி கைத்தறி நெசவாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர்

வரதராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில்

உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களின் குழுக்காப்பீட்டுத்திட்டத்திற்கு மத்திய அரசின்

பங்காக அளித்து வந்த 4 சதவிகித உதவியை கடந்த 2007 ஏப்ரல்

மாதம் முதல் மத்திய அரசு நிறுத்தம் செய்துள்ளது.

இந்த நிதியை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என

எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டபேரவையில் கைத்தறி நெசவாளர் சங்க

 உறுப்பினர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நான்கு சதவிகித உதவித்தொகையையும் மாநில அரசே வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

 இந்த அறிவிப்புக்கு நெசவாளர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போல கைத்தறி துறை அமைச்சர் நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்

 என அறிவித்துள்ளார்.

விலைவாசிகள் உயர்ந்துள்ள நிலையில் நெசவாளர்கள் பெற்றுவரும் கூலி மிகவும் குறைவாக

 உள்ளதைக்கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட பத்து சதவிகித கூலிஉயர்வை 25 சதவிகிதமாக

உயர்த்தி வழங்குமாறு  மாண்புமிகு தமிழக முதல்வரை

கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்