வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 4 மே, 2012

லாட்டரி அதிபர் வீட்டில் சோதனையிடுவதற்கு அனுமதி

 பிரபல லாட்டரி அதிபர் வீட்டில் சோதனையிடுவதற்கான அனுமதியை கொடுமுடி நீதி மன்றம் வழங்கியது.


 ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை
விற்றதாக கொடுமுடியை சேர்ந்த  ஹக்கீம், சண்முகம் என்ற இருவர் மீதும் கொடுமுடி போலிசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் இரண்டாவது எதிரியாக கோவையை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளரும் லாட்டரி
அதிபருமான மார்ட்டினை போலிசார் சேர்த்தனர்.

வழக்கு மீதான விசாரணை கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

மார்ட்டின் மீதான வழக்கில் அவருக்கு பிணை வழங்கக்கோரி அவரது வழக்குரைஞர்கள் சிவக்குமார்,
சங்கரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

வழக்கை நீதித்துறை நடுவர் பாபுலால் விசாரித்தார். விசாரணையில் முடிவில்  லாட்டரி அதிபர் மார்ட்டின்
மாதந்தோறும் முதல் நாளன்று கொடுமுடி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன்
கூடிய பிணை உத்தரவை பிறப்பித்தார்.

இதனை அடுத்து கொடுமுடி போலிசார்  மார்ட்டின் வீட்டில் சோதனையிட நீதிமன்ற அனுமதிகோரி
 கேட்டிருந்த மனு மீதான விசாரணை நடந்தது.  மார்ட்டின் வீட்டில் கொடுமுடி காவல்துறை ஆய்வாளர்
 சோதனை நடத்தலாம் என அந்த மனு மீது தனது அனுமதியை கொடுமுடி நீதித்துறை நடுவர்
மன்ற நீதிபதி பாபுலால்  வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்