வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 3 மே, 2012

லாட்டரி அதிபர் மார்ட்டினை....



பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை போலிஸ் காவலில் எடுக்க கொடுமுடி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி கொடுமுடி போலிசாரிடம் கொடுமுடியைச்சேர்ந்த ராஜி (51) தழுவம்பாளையத்தைச்சேர்ந்த சுரேஷ்(31)
ஆகிய இருவரும் தனித்தனியாக இரு புகார்களை அளித்தனர்.

புகாரில் தங்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை கொடுமுடியை சேர்ந்த ஹக்கீம் மற்றும்
 சண்முகம் என்பவர்கள் விற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன்பேரில் ஹக்கீம் மற்றும் சண்முகம் ஆகிய இருவர் மீதும் கொடுமுடி போலிசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில்   இரண்டாவது குற்றவாளியாக  பிரபல தொழில் அதிபர் மார்ட்டினை சேர்த்தனர். பின்னர் அவரை
 கடந்த வாரம் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

கொடுமுடி நீதிபதி பாபுலால்  தொழில் அதிபர் மார்ட்டினை நீதி மன்ற காவலில் மே மாதம் 3 ம்தேதி வரை   வைத்திருக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்  மார்ட்டினிடம் விசாரணை நடத்தவேண்டும் என கொடுமுடி போலிசார் கொடுமுடி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்கு கோவை மத்திய சிறையில் இருந்த மார்ட்டின் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகம் மார்ட்டின்  வருமானம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய
அவசியம் இருக்கிறது.என்று வாதாடினார்.

இதனை எதிர்த்து கொடுமுடி வழக்கறிஞர் சிவக்குமார் அடங்கிய குழுவின் தலைவராகசென்னையைச்சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார். மார்ட்டின் மீதான 16 வழக்குகளில் இதுவரை எங்கும் அவரை போலிசார் தங்கள் கஸ்டடியின் கீழ் விசாரணை நடத்தகோரவில்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் ஏற்கனவே ஏழு மாதங்களாக சிறையில் உள்ளார்.

 முன்னாள் எம்.பி .கே.சி பழனிச்சாமி மீதான வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்று போலிஸ் தரப்பில் கோரப்பட்ட விசாரணை மனுவை சம்பந்தப்பட்ட கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தவிர தற்போது நடந்துவரும் எம்.என் நடராஜன்(சசிகலாநடராஜன்) வழக்கிலும் போலிஸ் தரப்பு மனுவை சம்பந்தபட்ட கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிபாபுலால் மனு மீதான தீர்ப்பை மாலை 5 மணிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரை மார்ட்டினை நீதிமன்றத்தில் இருந்த அலுவலக அறையில் போலிசார் அமர வைத்திருந்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு  நீதிபதி பாபுலால் தனது தீர்ப்பை வாசித்தார்.

போலிஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், மார்ட்டினிடம் ஒரு நாள் போலிசார்
விசாரணை நடத்திவிட்டு இன்று 26 ம் தேதி மாலை ஐந்து மணிக்கு அவரை மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்  எனவும்  தீர்ப்பளித்தார்.
இதன்பேரில் போலிசார் மார்ட்டினை தங்களது காவலில் எடுத்து அழைத்து சென்றனர்.

 நீதி மன்றத்தை விட்டு போலிசாரால் அழைத்து வரப்பட்ட மார்ட்டினிடம் கொடுமுடி இன்ஸ்பெக்டர் துரைச்சாமி
   என்ன ?மார்ட்டின் எந்த வண்டியில்  வரவிருப்பம்  என கேட்டார். அதற்கு  மார்ட்டின்  நீங்கள்
எந்த வாகனத்தில் வரச்சொல்கிறீர்களோ அதில் வருகிறேன்  என சொன்னார்.

இதற்கு பின்னர் மார்ட்டினை இன்ஸ்பெக்டர் துரைசாமியின் ஜீப்பில் அமர செய்து போலிசார் அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்